💥பத்மாசனம் சிறப்புகள்...💥
💥பத்மாசனம் சிறப்புகள்....🌻
🌎அன்பு முகநூல் நண்பர்களே "ஓம்"என்னும் வலைப்பூ தளம் ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன .அதை நீங்கள் கிளிக் செய்தால் "ஓம் "வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்🌏
https://www.facebook.com/om14422019/
தியானம் செய்வதற்குப் பயன்படும் ஆசனங்களில் முதலிடம் பெறுவது இது.
தவசீலர்களுக்கு மட்டுமில்லாமல் அனைவருக்கும் பயன்தரக்கூடிய ஆசனம்.
இந்த பயிற்சி சோம்பலைத் தீர்த்து சுறுசுறுப்பை ஊட்டுகிறது.
முழங்காலுகளுக்கு நல்ல வலு ஊட்டுகிறது.குதிகால் நரம்புகள்,
தொடைப் பகுதிகள் முதலியவைகள் வலிமை பெறச் செய்கின்றது.
நுரையீரல் களை வளமாக்குகிறது.
நல்ல பசி உண்டாக செய்கிறது.
முழங்கால் மூட்டு வலியை போக்குகின்றன.
ஆழ்ந்த மூச்சு கிடைக்கின்றன.
விரிப்பின் மீது கால்களை விறைப்பாக நீட்டிக் இருப்பதைப்போல் முதலில் உட்காரவும்.வலது காலின் மடித்து, இடதுகால் புறமாகக் கொண்டுவந்து− வலது காலின் குதிகால் இடது கால் தொடங்கும் இடமான பிட்டியில்(இடுப்பெலும்பும் தொடை எலும்பும் சேருகின்ற இடம் )படும்படி சரியாக இருக்கும் வண்ணம் வைக்கவும்.
அதைப்போலவே இடது காலை மடித்து வலது கால் புறம் கொண்டு வந்து இடது காலின் குதிகால் வலப்புறம் பிட்டிப் பகுதியில் படுவது போல் வைக்கவும்.
இப்பொழுது குதிங்கால் இரண்டும் இடுப்பு எலும்புக்கு எதிரில் அடிவயிற்றை தொட்டுக் கொண்டிருக்கும் பிறகு உடலை நிமிர்த்தி உட்காரவும்.கைகள் இரண்டையும் முழங்கால் வைத்த படி மூச்சுபயிற்சி செய்யலாம்.
இந்த ஆசனத்தில் முழங்கால்கள் தரையைத் தொட்டுக்கொண்டிருப்பது போன்ற நிமிர்ந்து நிலையில் அமர்ந்திருக்க வேண்டும். தியானம், பிராணாயமம் செய்பவர்களுக்கு மிகவும் ஏற்ற ஆசனம்.
பயிற்சிமுறை:~
கால்களைநீட்டி நிமிர்ந்து உட்காருதல்.
வலது காலை இடது கால் தொடை மீது படும்படி வைத்தல்.
இடது காலை வலது கால் தொடை மீது படும்படி வைத்தல்.
கைகளை முழங்கால்கள் மீது வைத் ஆசன இருக்கையில் இருத்தல்.
என்ன முகநூல் நண்பர்களே இன்று பத்மாசனம் பற்றி படித்திருப்பீர்கள் நாளை பார்ப்போம் ஏகபாத ஆசனம்.
💥நன்றி சங்கரநாராயணன்
🌍" பகிர்தல் " ஒரு மிகச்சிறந்த பண்பாடு மட்டுமல்ல.
வாழ்க்கையில் உயர்வான இடத்தை அடைய
முக்கியமானதொரு ஆயுதமும் அதுதான்...🌏
Comments
Post a Comment