✋அபய முத்திரை ✋




🌎அன்பு முகநூல் நண்பர்களே  "ஓம்"என்னும் வலைப்பூ தளம் ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன .அதை நீங்கள் கிளிக் செய்தால் "ஓம் "வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்🌏


https://www.facebook.com/om14422019/


"பயம்"என்ற சொல்லுக்கு எதிர்ப்பதம் 

 "அபயம்" என்பதாகும் . பயங்களை

 அகற்றி ,பயமற்ற "அபய" நிலையை

 உருவாக்கும் ஒரு அற்புதமான

 முத்திரை இது.


உயர்நிலை முத்திரைகளில் அபய முத்திரை என்று ஒன்று உண்டு. ஆனால் அந்த அபய முத்திரைக்கும்  சிவ முத்திரையாகச் செய்யும் அபய முத்திரை குத்தும் சில வேறுபாடுகள் உண்டு. சிவ வழிபாட்டுடன் செய்யும்போது இங்கே

 தரப்படும் அபயமுத்திரை செயல்

 முறையை பின்பற்றுங்கள்.


☝ பயமே வளர்ச்சியின் எதிரி ✋


பயமே மனிதனின் வளர்ச்சிக்கு முதல் எதிரியாக உள்ளது .சுயமாக தொழில்

 துவங்க கூட பயப்படுகிறார்கள.் நஷ்டம்

 வந்து விட்டால் என்ன செய்வது என்ற

 பயத்திலேயே சம்பளத்திற்கு பிறரிடம்

 வேலைக்குச் சேர்ந்து விடுகிறார்கள்.

 இவர்களிடம் இருக்கும் "பயம் " ஒழித்தால்

 மட்டுமே வாழ்க்கையில் ஏற்றம் காண முடியும்.


பலர் தங்களிடம் இருக்கும் அபாரமான

 திறமை களை பயம் காரணமாகவே

 உள்ளுக்குள் புதைத்து

 வைத்திருக்கிறார்கள் .பிறர் ஏளனம்

 செய்வார்கள் என்ற பயம் !இந்த பயத்தை

 வெற்றி கொண்டு அவர்களை மாபெரும்

 கலைஞராகவும் தலைவர்களாகவும்

உருவெடுகிறார்கள்.


இறைவனின் துணையோடு, உங்கள் பயன்களை வெற்றி கொண்டு வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ள வழி காட்டும் ஒரு எளிய சிவ முத்திரையை அபய முத்திரை.


👆 செய்முறை


இடதுகை உள்ளங்கையை மலா்த்தி, அனைத்து விரல்களையும் வளைவின்றி நேராக வைத்துக் கொள்ளுங்கள்.


விரல்களில் இடைவெளியின்றி ஒன்றோடு ஒன்று இணைந்து இருக்க வேண்டும்.


விரல்களில் வானத்தை நோக்கி இருக்கும்படி வைத்துக் கொள்ளவும்.


💧 குறிப்பு


வர முத்திரைக்கும் அபய முத்திரையும் செய்முறை ஒன்றுதான்.


வர முத்திரையை வலது கையில் மட்டும் செய்ய வேண்டும் அபய முத்திரையை இடது கையில் மட்டும் செய்ய வேண்டும்.


வர முத்திரையில் விரல்கள் பூமி நோக்கி இருக்க வேண்டும் அபய முத்திரையில் விரல்கள் வானம் நோக்கி இருக்க வேண்டும்.


☝ அமரும் முறை


நீங்கள் நின்றுகொண்டே சிவனை தொழும் போது முத்திரையையும் நின்றுகொண்டே செய்யவும்.


அமர்ந்த நிலையில் சிவ தியானத்தில் ஈடுபடும் போது பத்மாசனம் அல்லது அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்து செய்யலாம்.


ஆசனங்களில் பரிசுத்தம் இல்லாதவர்கள் சாதாரணமாக சம்மணமிட்டு அமர்ந்து (சுகாசனம்) செய்யவும்.


முதுகும் கழுகும் வளைவின்றி நேராக இருக்க வேண்டும்.


🍓 சுவாசம்


இயல்பான சுவாச நடை


ஆழமாகவும் சீராகவும் இருந்தால் போதும்


கும்பகம் வேண்டாம்.


❄ எவ்வளவு நேரம்?


குறைந்த பட்சம் 8 நிமிடங்கள்


அதிக பட்சமாக 48 நிமிடங்கள் வரையில் செய்யலாம்.


🌷பலன்கள்


அனைத்து விதமான பயங்களும் மறையும்.


குறிப்பாக மரண பயம் அகலும்.


பயங்கள் அகலும்போது சிந்தனையில் தெளிவு வரும் சுதந்திரமான சிந்தனைகள் உருவாகும்.


மாணவர்கள் தேர்வுக்கு சில மாதங்கள் முன்னரே இந்த முத்திரை செய்ய துவங்கி விட்டால் தேர்வை குறித்த பயங்கள் அகலும்.


நேர்முகத் தேர்வுகளை செல்பவர்களும் இந்த முத்திரையை செய்து விட்டுச் சென்றால் பயமின்றி கேள்விகளை எதிர்கொள்ள முடியும்.


நோயாளிகள் இந்த முத்திரையைச் செய்யும்போது நோய் மரணம் குறித்த பயங்கள் அகலும்.


சுயதொழில் செய்பவர்களுக்கு இந்த முத்திரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


தினமும் இந்த முத்திரையை செய்தபடி சிவனை வழிபட்டால் வாழ்க்கையில் வளாகமாகும் நிம்மதியான வாழ்க்கை அமையும்.


🌀 நாளை பார்ப்போம் திரிசூல முத்திரை 🌷


நன்றி ஷர்மிளா ரவிக்குமாா்


🌍" பகிர்தல் " ஒரு மிகச்சிறந்த பண்பாடு மட்டுமல்ல.

வாழ்க்கையில் உயர்வான இடத்தை அடைய 

முக்கியமானதொரு ஆயுதமும் அதுதான்...🌏



Comments

Popular posts from this blog