🍁சித்த மருத்துவ குறிப்புகள் 141 to 160💮

வாழ்க்கைக்கு அன்றாடம் தேவையுள்ள சித்த மருத்துவ குறிப்புகள் 1000 ஓம் வலைப்பூ தளம் இடம்பெற்றுள்ளன மிக சாதாரண நோய் முதல் மிகக் கொடிய நோய்களுக்கு கூட மருந்துகள் கூறப்பட்டுள்ளன எல்லாருடைய வீட்டிலும் பாதுகாப்பை பயன் படக்கூடிய குறிப்புகள் இதில் உள்ளன.

🌎அன்பு முகநூல் நண்பர்களே  "ஓம்"என்னும் வலைப்பூ தளம் ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன .அதை நீங்கள் கிளிக் செய்தால் "ஓம் "வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்🌏

https://www.facebook.com/om14422019/



காய்ச்சல் குணமாக:−

  நெய் , தேன் ,வேப்ப இலை இம்மூன்றையும் எடுத்து ஒன்றாகக் கலந்து புகை மூட்டம் போட்டால் காய்ச்சல் உடனே நிற்கும்.

கண் நோய் தீர :−

சோற்றுக் கற்றாழையில் உள்ள சதையை எடுத்து அதனுடன் கால் ஸ்பூன் படிகாரம் சேர்ந்தால் உடன் நீர் கசியத் தொடங்கும் அந்த நீரை சிறிது பாட்டிலில் பிடித்து  வைத்துக்கொண்டு (தூசி விழாமல்) தினசரி 2 வேளைகண்களில் போட்டு வரகண் நோய் குணமாகும்.

செவிட்டு தன்மை குறைய :−

ஆட்டுப்பால் ,நல்லெண்ணெய்,வில்வக்காய், பசுவின் மூத்திரம், இவைகளை ஒன்றாகக் காய்ச்சி ஆறவைத்து பாட்டிலில் எடுத்து வைத்துக்கொண்டு சில சொட்டுகள் காதில் விட செவிட்டுத் தன்மையும் நீங்கும்.

இருமல் நிற்க  :−

குழந்தைகளின் இருமல் தொடர்ந்து இருந்தால் சிறு பெருங்காயத்தை எடுத்து வெந்நீரில் கரைத்து அந்தத் தெளிவை குழந்தைகளுக்கு கொடுத்து வர இருமல் நிற்கும்.

 சீதபேதி குணமாக :−

எள் மற்றும் வில்வப் பிஞ்சை சம அளவு எடுத்து மை போல் அரைத்து ஆரஞ்சு பழ சாறுடன் சிறிதுநெய்யையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி உடனே நிற்கும்.

முடக்கு வாதம் குணமாக :−

பிரப்பங்  கிழங்கை காய வைத்து இடித்து தூளாக்கி நீரில் கலந்து காய்ச்சி கசாயமாக சாப்பிட்டுவர முடக்குவாதம் குணமாகும்.

என்றும் இளமையுடன் வாழ:−

  புரச விதையையும் வாய்  விளங்கத்தையும் மைபோல் அரைத்து தேனுடன் நெல்லிக்காய் சாறு பிழிந்து வெண்ணெயுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் என்றும் இளமையுடன் வாழலாம்.

வெள்ளைப் போக்கு குணமாக:−

 சந்தன கட்டையை பன்னீர் விட்டு மையாக அரைத்து சுண்டைக்காய் அளவு 100 மில்லி பன்னீாில்  விட்டு கலக்கி அதனுடன் சிறிது குல்கந்தைப் போட்டு ஐந்து சொட்டு சந்தன அத்தரைப்  போட்டு கலக்கி காலை மாலை என இருவேளை வீதம் ஒரு வாரம் சாப்பிட்டு வர குணமாகும்.

சீதளக்காய்ச்சலுக்கு :−

 நாய் துளசியைக் வேருடன் பிடுங்கி வந்து நீரில் போட்டு கசாயமாக காய்ச்சி குடித்து வந்தால் காய்ச்சல் குணமாகும்.

பல் ஈறுகளில் உள்ள வலியை போக்க:−

 பப்பாளி காய் கீறினால் வெண்மையான பால் வரும் அந்தப் பாலை பல்வலி உள்ள இடத்தில் தடவி சிறிது நேரத்தில் இரத்தமும் சீழும் கலந்து வெளிவரும் பல் வலி சரியாகிவிடும்.

கட்டிகள் ஆறும் :−

உடலில் கட்டிகள் உள்ள இடத்தில் எருக்கம் பாலைத் தடவ் வந்தால் கட்டிகள் உடன் ஆறும்.

சீத பேதி நிற்க:−

குழந்தைகளுக்கு சீதபேதி இருந்தால் நாட்டு சர்க்கரையுடன் பசுவின் வெண்ணெய் சேர்த்து குழைத்து மூன்று வேளை கொடுத்து வர குணமாகும்.

தாய்ப்பால் தூய்மை அடைய:−

தேன்15 பங்கும் அழுத்துகிறாங் கிழங்கின் ரசம் 10 பங்கும், மிளகு ரசம் 15 பங்கும் மணத் தக்காளி ரசம் 25 பங்கும் கலந்து சாப்பிட்டு வர தாய்ப்பால் தூய்மை அடையும்.

உடல் வளர்ச்சி சுறுசுறுப்பு நரம்புத் தளர்ச்சி:−

உடல் வளர்ச்சிக்கும் நரம்பு தளர்ச்சி நீங்கவும் சுறுசுறுப்பை பெறவும் பீட்ரூட் அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வர பலன் கிடைக்கும்.

மலத்தில் இரத்த போக்கு நீங்க:−

அரசமரத்து கொழுந்து ஆல மரத்தின் கொழுந்து அத்தி மர கொழுந்து இம்மூன்றையும் நீர்விட்டுக் காய்ச்சி அந்த நீரை வடிகட்டி அதில் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வர மலத்தில் இரத்தம் போவது நிற்கும்.

 குழந்தைகளுக்குகருப்பான் நோய் நீங்க:−

கொட்டிக் கிழங்கை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி காய வைத்து இடித்து சூரணமாக வைத்துக் கொண்டு பசுவின் பால் கலந்து கொடுக்க கரப்பான் நோய் நீங்கும்.

உடல் பருமன் குறைய:−

துளசி இலை ரசத்தை சூடாக்கி சிறிது தேன் கலந்து குடித்தால் உடல் பருமன் குறையும்.

ஆண் உறுப்பு பலம் பெற:−

ஆம்பல் கிழங்கை காய வைத்து இடித்து தூள் செய்து வைத்துக்கொண்டு பசுவின் பாலில் கலந்து சாப்பிட பலன் கிடைக்கும்.

உடல் உருக்கிநோய் குணமாக:−

பூமி சக்கரை கிழங்கை சிறு சிறு வில்லைகளாக அரித்து வெயில் காய வைத்து இடித்து தூள் செய்து வைத்துக்கொண்டு பசும் பாலுடன் சாப்பிட்டு வர உடலுக்கு உருக்கிநோய் நீங்கும்.

குஷ்டரோகம் மாற:−

கோணிகிழங்கை காய வைத்து இடித்து தூள் செய்து வைத்து கொண்டு காய்ச்சிய பாலுடன் சாப்பிட்டு வரகுஷ்ட ரோகம் மட்டும் படும் குணம் பெறலாம்.

நன்றி ஷா்மிளா ரவிக்குமாா்

🌍" பகிர்தல் " ஒரு மிகச்சிறந்த பண்பாடு மட்டுமல்ல.
வாழ்க்கையில் உயர்வான இடத்தை அடைய
முக்கியமானதொரு ஆயுதமும் அதுதான்...🌏

Comments

Popular posts from this blog