👏👏👏👏பரசு முத்திரை 👏👏👏













👍அன்பு முகநூல் நண்பர்களே 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம் ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍


https://www.facebook.com/om14422019/


"பரசு " என்ற சொல்லுக்கு "கோடாரி" என்பது பொருள் விஷ்ணுவின் ஆறாவது அவதாரம் பரசுராம. இவர் சிவனை நோக்கி கடும் தவம் செய்து பரசு என்ற கோடாியைப் பெற்றுக் கொண்டதால் பரசுராமர் என்ற காரணப்பெயர் அவருக்கு வந்ததாக புராணங்கள் கூறுகின்றன.


"பரசு "என்ற கோடாரி பரசுராமருக்கு உரியது என்றாலும் ,விநாயகப் பெருமானுக்கும் ஆயுதமாக சித்தரிக்கப்படுவது பரசுதான் .கஜானனுக்கு (கணபதிக்கு )ஒரு கையில் பரசும் மற்றொரு கையில் பாசமும் (கயிறு )ஆயுதங்களாக உள்ளன.


💪தடைகளையும் விக்னங்களையும் வெட்டி அகற்றும் ஆயுதம் பரசு.


👌இல்லறவாழ்க்கையில் இருப்பவர்கள் அன்றாட வாழ்க்கையில் வருகின்ற தடைகளையும் சோதனைகளையும் வெட்டி வீழ்த்த ,விநாயகனை பரசு

 முத்திரையில் வணங்க வேண்டும்.


👏ஆன்மீகப் பாதையில் பயணிப்பவர்கள் பந்த பாசங்களை அறுக்கவும் ,மாலையின் கட்டுகளை வெட்டி

 எறியவும் ,அகங்காரம்  எனும் மலத்தை வெட்டி

 அகற்றவும் பரசு முத்திரையில் துணையை நாடலாம்.


🌍செய்முறை🌎


🎈இடது உள்ளங்கை மேல்நோக்கி இருக்கும்படி, நெஞ்சுக்கு அருகில் வைத்துக் கொள்ளுங்கள்.


👏வலது உள்ளங்கை கீழ் நோக்கி இருக்கும்படி வைத்து, அதை இடது உள்ளங்கையில் குறுக்காக வைத்துக் கொள்ளுங்கள்.


🐚கணேச மந்திரங்கள் அல்லது தோத்திரங்களை ஜெபித்தபடி ,கண்களை மூடி இந்த முத்திரையை செய்யவும்.


🍀மனம் முழுவதும் விநாயகரின் மேலும் முத்திரையின் மேலும் குவிந்து இருக்கட்டும்.


🌎அமரும் முறை🌍


🌷இது ஒரு ஆராதனை முத்திரை விநாயகரை வழிபடும் போது செய்ய வேண்டிய முத்திரை.


🍂நின்று கொண்டு செய்யலாம்.


🎲அமர்ந்து செய்வதாக இருந்தால் பத்மாசனம் அர்த்த பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து செய்யலாம்.


🎯முதுகும் கழுத்தும் வளைவின்றி நேராக இருப்பது அவசியம்.


🌍எவ்வளவு நேரம்?🌎


🏉விநாயகர் மந்திரம் அல்லது தோத்திரம் சொல்லி முடிக்கும் வரையில் முத்திரையை செய்யலாம்.


⚽குறைந்தபட்சம் எட்டு நிமிடங்கள்.


🐂தியானத்தில் அகவழிபாடு அமர்ந்து செய்வதாக இருந்தால் அதிக பட்சமாக 48 நிமிடங்கள் வரையில் செய்யலாம்.


🍁பலன்கள்🎃


🍉தடைகளும் விக்ரகங்களும் அகலும்.


💧மனம் பண்படும்.


🐱பந்தபாசங்கள் அகலும்.


🐂நான் எனும் அகங்காரம் அழியும்.


🌎குறிப்பு 1🌍


🔔தடைகளையும் விக்னங்களையும் அகற்றும் வேறு சில கணேச முத்திரைகளை ஏற்கனவே கண்டோம்.


👌தந்த முத்திரை அங்குச முத்திரை விக்ன முத்திரை ஆகிய பல கணேச முத்திரைகளையும் தடைகளை அகற்றும் முத்திரைகளை.


🎲ஆனால் ஆயுதம் என்று பார்க்கும்போது தந்தம் அங்குசம் ஆகியவற்றை விடவும் பல மடங்கு சக்தி வாய்ந்த பரசு எனும் கோடாரி.


🎃பரசு முத்திரையும் அவ்வாறு மிக சக்திவாய்ந்த ஒரு முத்திரை ஆகும்.


⚽குறிப்பு 2🍂


💪பரசு என ஒரு கர்நாடக சங்கீத ராகம் உள்ளது இது 15வது மேளகர்த்தா ராகமாகும் மாயமாள கெளளையின் ஜன்னிய  ராகம் இது.


🌷இந்த ராகத்திற்கும் பரசு முத்திரை க்கும் எந்த சம்பந்தமும் கிடையாது இரண்டையும் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம்.


அடுத்ததாக லட்டுகம் முத்திரை பீஜ முத்திரை ஆகிய இரண்டு கணேச முத்திரைகளை குறித்து காணலாம்.


🎈லட்டு கணேசனுக்கு மிகவும் பிடித்த உணவு.


🎲பல சித்திரங்களின் விநாயகரின் ஒரு கையில் லட்டு இருப்பது போன்ற சித்தரிக்கப்பட்டிருக்கும்.


🎯சில படங்களில் விநாயகருக்கு முன்னாள் லட்டு மாதுளம் பழமும் தட்டுகளில் குவித்து வைத்து இருப்பதைப் போல் வரையப்பட்டிருக்கும்.


👌இவை இரண்டுமே இனிமை வறுமை செம்மை ஆகியவற்றின் குறியீடுகள் ஆகும்.


👏விநாயகரை வணங்கும் போது இந்த இரு முத்திரைகளை ஒன்றாய் செய்தபடி வணங்கினால் வாழ்க்கையில் வளமும் இனிமையும் பெருகும்.


🌿விநாயகப்பெருமானை கடைக்கண் பார்வை நம் மேல் படும் இனி இரு முத்திரைகளின் செய்முறைகளை காணலாம்.


🎯அன்பு முகநூல் நேயர்களே அடுத்து வரும் முத்திரைகள் லட்டுக முத்திரைகள் .🎲


🎈முத்திரைகள் என்பது வாழ்க்கையில் அவசியமான ஒன்றாகும் அதனால் நீங்கள் இந்த முத்திரையை பற்றி படித்திருப்பீர்கள் நீங்கள் படித்தது மட்டும் இல்லாமல் பிறருக்கும் பகிர்ந்து

 மகிழுங்கள் சர்வம் சிவார்ப்பணம் 🌷


🌷நன்றி : ஷர்மிளா ரவிக்குமாா்


🌍" பகிர்தல் " ஒரு மிகச்சிறந்த பண்பாடு மட்டுமல்ல.

வாழ்க்கையில் உயர்வான இடத்தை அடைய 

முக்கியமானதொரு ஆயுதமும் அதுதான்...🌏

Comments

Popular posts from this blog