🌎 பீஜாபூர முத்திரை🌏





                                 🔥  செய்முறை


ஒரு மாதுளம்பழத்தை உள்ளங்கையில் வைத்துக்கொண்டு விரல்களால் அதை மூடினால் எப்படி இருக்குமோ அப்படி விரல்களை வைத்துக் கொள்வதே   பீஜாபூர முத்திரையாகும்.

இரண்டு கைகளையும் ஒரே நேரத்தில் செய்யவும்.

      💧  குறிப்பு:

சமான வாயு முத்திரையில் ஐந்து விரல்களின் நுனிப் பகுதிகளும் ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கும்

 பிஜாபூரமுத்திரை ,லட்டுக முத்திரை ஆகியவற்றில் விரல்களின் நுனிகள் தொடாது ~விலகியே இருக்கும் .

                      🐘  அமரும் முறை


நின்று கொண்டு விநாயகரை வணங்கலாம்.

அல்லது அமர்ந்த நிலையிலும் தியானம் செய்யலாம்.

 இரு நிலைகளிலும் பிஜாபூர முத்திரை செய்யலாம்.

 எந்த நிலையிலும் செய்தாலும் முதுகும் கழுத்தும் வளைவின்றி, நேராக இருக்கட்டும்.

                        🐎 சுவாசம்

இயல்பான சுவாச நடை 

ஆழமாகவும் சீராகவும் இருக்கட்டும்.

 கும்பகம் கூடாது.


                                  🕛எவ்வளவு நேரம்?


குறைந்த பட்சம் 8 நிமிடங்கள் 

அதிக பட்சமாக 48 நிமிடங்கள்


                                      ☎   பலன்கள்


லட்டுகள் முத்திரைக்கு கூறப்பட்டுள்ள அதே பலன்கள் பூஜாபூர முத்திரைகளிலும் கிடைக்கும் .

அடுத்து சிவனை வழிபடும் போது செய்ய வேண்டிய சிவ முத்திரைகள் குறித்து காணலாம்


சைவநெறியில் பிறந்தவர்களுக்கு சிவபெருமானை முழுமுதற் கடவுள் நமது சித்தர்கள் அனைவருமே சிவனை தலைவனாகக் கொண்டு வணங்கியவர்கள் வடநாட்டில் வைணவமும் ,தென்னாட்டில் சைவமும், செழித்து வளர்ந்திருந்தன எனவேதான் ,

"தென்னாட்டுடைய சிவனே போற்றி "என்கிறோம் .சைவ சித்தாந்தமே தமிழ்நாட்டுக்குரிய ஆதி மதம் .

சிவனுடைய அருளைப் பெறவும் ,சிவனை வசீகரிக்கும் 
செய்யப்படும் பிரார்த்தனை முத்திரைகளை சிவ முத்திரைகள் என்கிறோம் இவற்றில் முக்கியமான முத்திரைகள்.

👍லிங்க முத்திரை

👎 யோகினி முத்திரை

 👏அட்சரமாலை முத்திரை

 ✌வர முத்திரை

 👇அபயமுத்திரை 

✊திரிசூல முத்திரை 

👊மிருகி முத்திரை 

✋கட்வாங்க முத்திரை

 🌷கபால முத்திரை 

🚴டமருக முத்திரை

இவர்கள் லிங்க முத்திரை மிருகி முத்திரை யோனி முத்திரை அபான முத்திரை ஆகியவையும் பிரார்த்தனைகளுக்கு மட்டுமின்றி வேறு காரியங்களுக்கு யாவும் பயன்படுத்துகின்றன ஆனால் இந்த முத்திரைகளை சிவா முத்திரைகள் செய்யும் போது அவற்றின் செய்முறையில் சிறுசிறு மாற்றங்கள் இருப்போம் அவற்றை கவனித்து செய்யவும்.

நான் எழுதிய முதுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முத்திரைகள் என்ற நூலில் லிங்க முத்திரை இருக்கும் முத்திரை ஆகிய இரு முத்திரைகளும் குறித்தும் விரிவாக எழுதி யிருக்கிறேன்.

 ஏற்கனவே அந்த முத்திரைகளை செய்து வருபவர்கள் அந்த 
நூலில் குறிப்பிட்டுள்ள பலன்களை பெறுவதற்காக அந்த முத்திரைகளைச் செய்யும்போது அதில் குறிப்பிட்டுள்ள முறைகளை பின்பற்றுங்கள் .

வேறுமனே தோத்திரங்கள், மந்திரங்கள் கூறி வழிபடுவதை விட ஒவ்வொரு கடவுளுக்கும் உரிய முத்திரையைத் செய்தபடி வழிபடும்போது பலன் மிக மிக அதிகமாக இருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

🍁நன்றி: ஷர்மிளா ரவிக்குமாா்

❄அடுத்து நாம் பார்க்க இருப்பது லிங்க முத்திரை 🌀


சர்வம் சிவார்ப்பணம்





Comments

Popular posts from this blog