💧கடலூர் மாவட்டத்தில் காணப்படும் சித்தர்களின் ஜீவசமாதி சமாதிகள்💧
🍓அடுத்த வாரம் நாம் பார்க்க இருப்பது தர்மபுரி மாவட்டத்தில் காணப்படும் சித்தர்களின் சமாதி ஜீவசமாதி🍓
சித்தர்கள் அடங்கிய இடங்களில் கோவில்கள் ,ஜீவசமாதிகள் எழுப்பி வணங்கி வருகின்றனர்.
ஆன்ம அமைதி வேண்டி அவ்வாறான ஜீவசமாதிகளைத் தேடித் தேடித் சிலர் செல்கின்றனர்; அமைதியும் அடைகின்றனர்.
சித்தர்கள் தமக்காக வாழ்ந்தவர்கள் அன்று .எனவே ,அவர்கள் பூரணத்துவம் பெற்ற பிறகும் நம்மை ஆசீர்வதித்து
வருகிறார்கள்.
அப்படிப்பட்ட சித்தர்களின்
அமைவிடங்களை ,ஜீவசமாதிகளை இந்த முகநூல் வாயிலாக இதற்கு முன் "பிரகதீஸ்வரர் "என்ற பெயரிலும் இப்பொழுது "ஓம் "என்ற பெயரிலும் தேடித் தேடிச் சென்று தகவல் சேகரித்து நமக்காக
தருகிறார் .கடுமையான பணியைச் செவ்வனே செய்திருக்கிறார். அதற்காக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வோம்.
ஓம்
💥 குமாரதேவர்
ஏறத்தாழ 300 ஆண்டுகளுக்கு முன் தோன்றியவர் இவர்.
இவருடைய குருநாதர் ஸ்ரீ சாந்தலிங்கம் சுவாமி, சீடர் சிதம்பர சுவாமி. இவர் புரட்டாசி மாதம் பூர்வ பட்சம் சதுர்த்தி திதி கூடிய பூரம் நட்சத்திரத்தில் சமாதி ஆனார்.
இவரது இரண்டாவது சீடரான ரெட்டி சிதம்பரசுவாமி இவருக்கு சமாதியும் மடமும் அமைத்தார் .
விருத்தாசலத்திற்கு தெற்கில் ஆண்டிமடம் செல்லும் சாலையை அடுத்து ஊரின் தென் எல்லையில் அமைந்துள்ள குமாரசாமி மடத்தில் இவரது சமாதி அமைந்துள்ளது.
💧 ரெட்டி சிதம்பர சுவாமிகள்.
குமாரதேவர் in இரண்டாவது சீடர் இவர், குமாரதேவர் சமாதி ஆன போது, முதல் சீடர் திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் திருப்பேரூரில் ஆதீனம் அமைத்துச் சென்று விட்டதால், தம் குருவுக்கு அணுக்கத் தொண்டராய் விளங்கிய இவர். ஒரு குமாரதேவர் சமாதிக் கோயிலும், மடமும் ஏற்படுத்தினார் .
விருதாச்சலம் ஸ்ரீ குமார தேவர் மடத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதிக்கு எதிரில் இருக்கும் நந்திக்குக் கீழ் இவர் சமாதி உள்ளது.
🍁 மன்னாத சுவாமி
சுமார் 80 வருடங்களுக்கு முன்பு சமாதியானார் .கடலூரில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் திருவந்திபுரம் பஸ் ஸ்டாப்பில் இறங்கி சிறிது தூரம் சென்றால் இவரது சமாதி இருக்கிறது.
ஓம்
🔥 மகான் லாட முத்தரசு.
கடலூரில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கேப்பர் அழகர்மலை அடிவாரத்தில் இவரது சமாதி உள்ளது இவர் 1902 ஆம் ஆண்டில் சமாதியானார்.
📣 அழுக்குச் சித்தர்
மகான் லாட முத்தரசு அவர்களின் சமாதிக்கு அருகில் இவரது சமாதி இருக்கிறது.
🍉குரு நமச்சிவாயர்
திருவண்ணாமலை குகை நமசிவாயரின் முதன்மை சீடர் சிதம்பரம் வேய்கான் தெருவில் ,,காமராஜர் மெட்ரிகுலேஷன் பள்ளி அருகில் இவரது சமாதி உள்ளது.
🌺 மறைஞான சம்பந்தர்
ஆவணி மாதம் உத்திர நட்சத்திரத்தில் சமாதி ஆனார் சிதம்பரத்திற்கு வடமேற்கு 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சிங்காரத்தோப்பு இன்டேன் கேஸ் கிடங்கு
அருகில் இவரது சமாதி உள்ளது.
🌷உமாபதி சிவாச்சாரியார்
சிதம்பரம் நடராஜர் கோயில் கொடி ஏற கொடிக் கவி பாடியவா் சித்திரை மாதம் அஸ்த நட்சத்திரத்தில் சமாதி ஆனார்.
சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள சீனிவாசா தியேட்டர் மற்றும் இன்ஜினியரிங் கல்லூரி அருகில் உள்ள ambika rice mill பின்புறம் இவரது சமாதி உள்ளது.
🍓திருமூலர்
புரட்டாசி மாதம் அவிட்டம் நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர் சிதம்பரத்தில் இவரது சமாதி உள்ளது.
🌍 அவதூதர் சாமிகள்
சிதம்பரம் குரு அய்யனார் தெருவின் கடைசியில் உள்ள நந்தவனம் பகுதியில் இவரது சமாதி உள்ளது.
🎐 பொன்னம்பல சுவாமி
சிதம்பரம் மன்னார்குடி ரோடு தெருவில் இவரது சமாதி உள்ளது.
ஓம்
⬜🎈 பகவந்த சுவாமிகள்
பிறப்பிடம் பின்னணி பற்றி தகவல் தகவல்கள் எதுவும் அறிந்தவா் யாரும்
இல்லை இவருக்கு வழங்கப்பட்டு வந்த
வேறுபெயர்கள் ;கணபதி சுவாமிகள்,
குருநாதர் சுவாமிகள், சுவாமிநாத சுவாமிகள் போன்றவை.
எல்லோரையும் ஆசீர்வாதம் செய்யும் போது , "பகவந்தன் இருப்பான்";
காப்பாற்றுவான்" என்று சொல்லி
ஆசிர்வதித்தார் இவருக்கு பகவந்த சுவாமிகள் என்று பெயர் வந்தது .அன்னை
ஸ்ரீ ராஜராஜேஸ்வரி சுவாமிகளின்
வடிவில் இவ்பூலோகத்தில் உலாவியதாகச் செய்தி இவர் விரோதி கிருது வருடம் மார்கழி மாதம் ஐந்தாம்
தேதி 18 .12 .ஆயிரத்து 889 புதன் வாரம்
கிருஷ்ணபட்ச ஏகாதசி திதி சித்திரை
நட்சத்திரத்தன்று இரவு 11 மணிக்கு
சமாதியானார் .
கடலூர் திருப்பாப்புலியூருக்கு அடுத்த
புதுப்பாளையத்தில் கெடில
நதிக்கரையில் இவரது சமாதி உள்ளது.
🌰 தயானந்த சுவாமி
இவரது பிறந்த ஊர், பெயர் பற்றி தகவல் எதுவும் தெரியவில்லை. பகவந்த சுவாமி சமாதி அடையும் காலம் வரை அவருக்கு கடலூரில் சேவை செய்து வந்தவர் இவர்.
இவர் 26 ஆயிரத்து 905 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு விஸ்வாசு வருடம் ஆனி மாதம் 12ஆம் தேதி சமாதிநிலை அடைந்தார.
் இவரது சமாதி கடலூர் திருப்பாப்புலியூருக்கு புதுப்பாளையம் கெடில நதிக்கரையில் பகவந்த சுவாமிகளின் சமாதிக்குச் தென்மேற்கு பகுதியில் உள்ளது.
ஓம்
🔶வாய் மூடி சுவாமி சித்தர்
1961இல் கார்த்திகை மாதம் பூராடத்தில் சமாதி ஆனார் வடலூரில் இருந்து 10 கிலோ மீட்டர் சிதம்பரம் விருத்தாசலம் சாலையில் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சேத்தியாத்தோப்பு பஸ் நிலையம் அருகில் உள்ள தீயணைப்பு துறை நிலையத்திற்கு அருகில் சந்தைதொகு வளாகத்தில் இவரது சமாதி இருக்கிறது.
👥 தத்துவராயர் சுவாமி
சுமார் 850 வருடங்களுக்கு முன்பு பிறந்தவர் சேத்தியாத்தோப்பில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எழும்பூர் கிராமத்தின் இவரது சமாதி உள்ளது.
🌎 தில்லை வாத்தியார் சுவாமி
சேத்தியாத்தோப்பு புவனகிரி சாலையில் 6 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பெருமாத்தூர் இவரது சமாதி உள்ளது.
📦 ஸ்ரீ பரப்பிரம்மம் யோக ஞான சுவாமி
சிதம்பரத்தை அடுத்த புவனகிரியில் பிலவ ஆண்டு ஆவணி எட்டாம் தேதி அன்று 23 .8 .1901 இல் பிறந்தார் ஏழு எட்டு 1961ம் . பிலவ ஆண்டு ஆடி மாதம்
மிருகசீரிட நட்சத்திரத்தன்று சமாதியானார் .ஸ்ரீமுஷ்ணம்~ விருத்தாசலம் சாலையில் ஆறுமுகம் செட்டி குளத்துக் கரையில் இவரது சமாதி உள்ளது.
🙌 குமாரதேவர்
புரட்டாசி மாதம் பூர்வ பட்ச சதுர்த்தி திதி பூரம் நட்சத்திரத்தில் சமாதி ஆனார் விருதாச்சலம் ஊருக்குத் தெற்கே ஆண்டிமடம் செல்லும் சாலையை அடுத்து காணப்படும் ஊரின் எல்லையில் இவரது மடம் சமாதிகள் உள்ளன.
🌲 மெய்கண்டார்
ஐப்பசி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் சமாதி ஆனார் அல்லது திருக்கோவிலூரில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருவெண்ணெய் நல்லூருக்கு வடக்கே வீதியின் கடைசியில் இவரது சமாதி உள்ளது.
🍄 அருள்நந்தி சிவாச்சாரியார்
புரட்டாசி மாதம் பூர நட்சத்திரத்தில் சமாதி ஆனார் பண்ருட்டியில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருத்தகடூா் சிவன் கோயிலுக்கு எதிரில் இவரது சமாதி உள்ளது.
🌸சகஜானந்தா
வைகாசி மாதம் மூல நட்சத்திரத்தில் சமாதி ஆனார் சிதம்பரத்தில் காட்டு மன்னார்குடி செல்லும் சாலையில் ஊர் கோடியில் உள்ள குளம் பகுதியில் இருக்கும் நந்தனார் மடத்தில் இவரது சமாதி உள்ளது.
ஓம்
💲 மௌன சுவாமி
இவரது சமாதி சிதம்பரத்தில் உள்ள சுவாமி ஆலயம் 39 சபாநாயகர் தெருவில் உள்ளது.
🌱 நித்தியானந்தா சுவாமி
இவர் முருக பக்தர் .இவர் சமாதி
அடைந்தது கோழிப்பாக்கம் என்னும்
கிராமத்தில் ,பங்குனி மாதம,் விசாகம்
நட்சத்திரத்தில்.
இவரது சமாதி பண்ருட்டி~கடலூா் சாலையில் ஆறு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அண்ணாகிராமம் சென்று அங்கிருந்த மூன்று கிலோமீட்டர் சென்றால் கோழிப்பாக்கத்தில் காணலாம்.
👌கல் பரதேசி
பண்ருட்டி திருக்கோயிலூர் சாலையில் உள்ள செவ்வாழையில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள சர்க்கரை ஆலை வளாகத்தையொட்டி வலதுபுறம் இவரது சமாதி இருக்கிறது.
⬜ சுப்பிரமணிய தேசிகர்
கடலூர் பண்ருட்டி சாலையில் 25 கிலோமீட்டர் விழுப்புரம் பண்ருட்டி சாலையில் 22 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திருவதிகை வீரட்டேசுவரர் கோயிலின் வெளிப்புறத்தில் தென்மேற்கு மூலையில் இவரது சமாதி உள்ளது.
🌸 சிவஞான தம்பிரான்
சுப்பிரமணிய தேசிகர் in சமாதியின் மீது உள்ள சிவலிங்கத்திற்கு எதிரே உள்ள நந்திக்கு கீழ் இவரது சமாதி உள்ளது.
ஓம்
💮 குமாரசுவாமி தம்பிரான்
வீரட்டேசுவரர் கோயிலின் வடமேற்கு மூலையில் மாடம் இவரது சமாதி உள்ளது.
👍அன்பு முகநூல் நண்பர்களே 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம் ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍
https://www.facebook.com/om14422019/
🐘 குண்டலம் பரதேசி
குமாரசாமி தம்பிரான் சமாதிக்கு பின்புறம் இவரது சமாதி உள்ளது.
🐴 அண்ணாமலை சுவாமி
பண்ருட்டி அரசூர் சாலையில் நாலு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பனப்பாக்கத்தில் இறங்கி ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்தால் இவரது சமாதி .
அருகிலேயே இவரது சீடரான கிருஷ்ணன் நாயர் ; சுவாமி தங்கராசு சுவாமி காணப்படும் ஆகிய இருவரின்
சமாதிகளும் அமைந்துள்ளன.
🐂பண்டைக்குல சாமியார் .
பண்ருட்டியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நெல்லிக்குப்பம் பூலோகநாதர் சிவன் கோயில் எதிரில் இவரது சமாதி உள்ளது
🐮 kumara guru பரமேஸ்வரர்
பண்ருட்டி கடலூர் சாலையில் கிருஷ்ணசாமி கல்லூரி எதிரில் உள்ள குமாரபுரத்தில் இவரது சமாதி உள்ளது.
🐹 திருவம்பல பொன்னம்பல அப்பர்
இவரது சமாதி கடவுள் அவர்கள் இருந்து 7 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திருவந்திபுரத்தில் இருக்கும் தேவநாத பெருமாள் கோயிலை சுற்றிய தூரத்தில் இருக்கிறது.
🐯நொண்டிச் சித்தர் சிவசண்முக மெய்ஞ் ஞான தேசிகர்
கடலூர் வண்டிப்பாளையத்தில் அம்பேத்கார் நகர் எதிரில் இவரது சமாதி உள்ளது.
🐙 சாது சண்முக சுவாமி
கடலூரில் கம்மியா பேட்டையில் பராசக்தி கோயில் எதிரில் இவரது சமாதி இருக்கிறது.
ஓம்
🐉வெட்டவெளி சித்தர்
கடலூர் திருப்பாதிரிபுலியூர் மஞ்சகுப்பம் பெண்ணை ஆற்றங்கரையில் ஆற்றுப்பாலம் ராஜராஜன் மோட்டார் பஸ் ஸ்டாப்புக்கு அருகில் இவரது சமாதி உள்ளது.
🐬 சாந்தானந்த சுவாமி
நாலு 12 2005 இல் சமாதி ஆனார் கடலூரில் பெண்ணையாற்றங்கரையில் ராஜராஜன் மோட்டார் பஸ் ஸ்டாப்பிற்கு அருகில் இவரது சமாதி இருக்கிறது.
🐠 முருகானந்த அடிகள்
திருநெல்வேலி மாவட்டம் சிவகிரியில் 22. 8 .1911 இல் பிறந்தார் 108 சன்மார்க்க சங்கங்களை தோற்றுவித்த இவர் நாலு மூணு 1964ல் மாசி மாதம் மக நட்சத்திரத்தில் சமாதி ஆனார் வடலூரில் ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் உள்ள இவரது ஆசிரமத்தில் இவரது சமாதி உள்ளது.
🐧 வள்ளலார்
தைப்பூசத்தன்று பெருவெளியில் கலந்தவர் நெய்வேலி அருகில் உள்ள வடலூரில் இவரது நினைவிடம் உள்ளது.
🐸 எலுமிச்சை ராமசாமி சித்தர்
வடலூர் ஆர் குருகுலம் அருகில் வள்ளலார் நகரில் எண்கோண வடிவில் இவரது சமாதி இருக்கிறது.
🐦 ஓமந்தூரார்
இவரது முழுப்பெயர் ஓமந்தூர் ராமசாமி செட்டியார் ஓமந்தூர் இரண்டு இரண்டு 1895-ல் பிறந்தார் 1970 இல் சமாதி அடைந்தார் வடலூர் opr குருகுலத்தில் இவரது சமாதி இருக்கிறது.
🐞 நிர்வாண முத்து குமாரசுவாமி
இவரது இயற்பெயர் முத்தையா தமது கடைசிக் காலத்தில் விருதாச்சலத்தில் சிரித்தாள் சுவாமிகள் ஆலயத்தில் தங்கி இருந்தபோது சமாதி அடைந்திருக்கிறார் இவர் விருத்தாசலத்தில் சரி பழமலை நாதர் திருக்கோயில் வடக்கும் தெற்கும் மேற்கும் தெருவும் சந்திக்கும் இடத்தில் இருந்து வடக்கே நோக்கி செல்லும் சாலையின் முடிவில் மணிமுத்தா நதியின் தென்கரையில் உள்ள தத்தா சுவாமி சமாதி கோயில் இக்கோயிலின் முன் உள்ள நந்தியை அடுத்து காணப்படும் பலி பீடத்தின் கீழ் இவரது சமாதி காணப்படுகிறது.
ஓம்
🐥 ஸ்ரீ தாத்தா சுவாமி
இவரது ஊர் பெயர் மற்றும் விவரங்கள் தெரியவில்லை திருமுதுகுன்றம் என்று அழைக்கப்படும் விருதாச்சலத்தில் 1936இல் சித்தர் என உணரப்பட்டு அருள்புரி அருளாட்சி புரிந்தார் வந்தார் எல்லோரையும் இவர் தாத்தா என்று அழைத்த காரணத்தினால் இவர் தாத்தா சுவாமிகள் என்ற பெயர் இவர் ஸ்ரீமுக வருடம் ஐப்பசி மாதம் 23ஆம் தேதி புதன்கிழமை புனர்பூச நட்சத்திரத்தில் சமாதி ஆனார் விருதாச்சலத்தில் பழமலை நாதர் ஆலயத்தில் வடக்கு தெரு மேற்கு தெருவும் சந்திக்கும் இடத்தில் இருந்து செல்லும் மணிமுத்தா நதியின் தென்கரையில் இவரது சமாதி உள்ளது.
🍓 சிவ பழனி ஞானி
கொங்கு நாட்டின் மேலை சிதம்பரம் என்று அழைக்கப்படும் பேருரை அடுத்த மனைக்கு அருகில் இருக்கும் கொண்டாம் பாளையம் என்னும் கிராமத்தில் பிறந்தவர் நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் பரம்பரை நிர்வாண முத்துக்குமாரசாமியின் சிஷ்யர் இவருடைய இயற்பெயர் பழனி தான் சமாதி ஆகப் போகும் நாளை முன்கூட்டியே அறிவித்தவர் 25 5 ஆயிரத்து 954 செவ்வாய்க்கிழமை சதய நட்சத்திரத்தில் சமாதி அடைந்திருக்கிறார் விருதாச்சலம் மணிமுத்தா நதியின் தென்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ தாத்தா சுவாமி சமாதி கோயில் இருக்கும் சிவலிங்கத்திற்கு எதிரே உள்ள நந்திக்கு கீழே உள்ள குகையில் இவரது சமாதி இருக்கிறது அந்த குகைக்கு உள்ளே இருக்கும் பணியிடத்திற்கு கீழ் இருப்பது ஸ்ரீ நிர்வாண முத்துக்குமாரசாமியின் சமாதி.
🍄நன்றி சர்மிளா ரவிக்குமார்
🌍" பகிர்தல் " ஒரு மிகச்சிறந்த பண்பாடு மட்டுமல்ல.
வாழ்க்கையில் உயர்வான இடத்தை அடைய
முக்கியமானதொரு ஆயுதமும் அதுதான்...🌏
Comments
Post a Comment