🌺சித்தர்களின் தியானம் 🔥

தியானம் என்பது இடைவிடாது நினைந்திருத்தல். தியானம் இரண்டு வகை .ஒன்று பரத்தியானம், மற்றொன்று சிவத்தியானம்.


உருவோடு கூடியசக்தியே மேலாய் எண்ணுவது பரத்தியானம். ஒளி பொருத்தியே சிவனை எண்ணுவது சிவத்தியானம் .

தியானத்தின் போது மனத்தில் விளங்கும் ஒளியை மேலேசெலுத்தி சினமாகிய நெருப்பை நீக்குதல் வேண்டும் .


தியானம் செய்யும் சாதகர் கண்பார்வையைப் புருவ மத்தியில்செலுத்தவேண்டும்.புருவநடுவினைஉற்றுப் பார்த்திட மெய்யுணர்வு ஒளி வெளிப்படும். இரு கண்களை சேர்த்து மனத்தைப் பொருத்திட அது சாத்தியமாகும்.

 திருமூலரைப் பொருத்தவரை சிவனைச்சிந்தனையில் வைப்பது தியானம் .

தியானத்தின் மூலம் கண்ணாடியில் உருவத்தைக் காண்பது போல் உங்கள் உள்ளத்தில் இறைவனை எளிதாக கண்டு விடலாம் என்றார் அவர் .

தியானத்தில் ஆழ்ந்திருப்பவா்க்குப் பத்துவித ஒலிகள் நுண்மையாய் விளங்கும் மணி, கடல் ,யானை ,புல்லாங்குழல், மேகம், வண்டு, தும்பி, சங்கு ,பேரிகை ,யாழ் என்ற 10 ஓலிகள்.

 உந்திச் சக்கரத்துக்கு நான்கு விரற்கடை மேலாகவும், தொண்டை ச்சக்கரத்துக்கு இரண்டு விரற்கடை கீழாகவும் பொங்கி எழுகிறது ஒளி அந்த ஒளியை அசைவற்று இருந்து தியானிக்க வல்லவர் ஆத்மாவை தரிசிப்பார் .

ஆயிரம் இதழ் தாமரையில் அன்னை விளங்குகிறாள் .அங்கே பேரொளிப் பெருவிளக்கு எப்போதும் ஒளிவிட்டு கொண்டிருக்கிறது.


அவ்வழியே காண்பது பேரின்பம் யோகியரும் ஞானியரும் வாய்க்கின்ற அந்த அனுபவத்தை நீங்கள் தியானத்தின் மூலம் பெற முடியும் என்றார் திருமூலர்.


"பள்ளி  அறையிற் பகலே இருளில்லை ,

கொள்ளி அறையிற் கொளுந்தாமற் காக்கலாம்

ஒள்ளி தறியிலோ ரோசனை நீளிது

வெள்ளி அறையில் விடிவில்லைதானே",

இதுதிருமந்திரம்.


நன்றி:=ஷர்மிளா ரவிக்குமாா்.


🌍" பகிர்தல் " ஒரு மிகச்சிறந்த பண்பாடு மட்டுமல்ல.
வாழ்க்கையில் உயர்வான இடத்தை அடைய 
முக்கியமானதொரு ஆயுதமும் அதுதான்...🌏

Comments

Popular posts from this blog