🌏யோனி  முத்திரை🌎




🌎அன்பு முகநூல் நண்பர்களே  "ஓம்"என்னும் வலைப்பூ தளம் ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன .அதை நீங்கள் கிளிக் செய்தால் "ஓம் "வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்🌏


https://www.facebook.com/om14422019/


யோனி முத்திரையில் பல வகைகள் உள்ளன .இப்போது நாம் காணப்போவது சில வழிபாட்டிற்கான யோனி முத்திரை.


"யோனி "என்பது பெண் சக்தி அல்லது இயங்கு சக்தியை குறிக்கும் ஒரு குறியீடு. லிங்க முத்திரை சிவனையும்,  யோனி  முத்திரை பார்வதியும் வசப்படுத்தும் முத்திரையாகும்.


யோனி என்பதற்கு "பெண்குறி" என்று ஒரு அர்த்தம் உண்டு.


ஒவ்வொரு மனிதனின் உடலில் ஆன் சக்தியும் (நிலை சக்தி ),பெண் சக்தியும் (இயங்குசக்தி) உள்ளன. இவை இரண்டும் இணையும் போதுதான் சக்தி ஓட்டம் முழுமை பெறும்.




லிங்க முத்திரை நமது உடலில் உள்ள ஆண் சக்தியையும் (பாசிட்டிவ்− நேர் சக்தி) யோனி முத்திரை நமது உடலிலுள்ள பெண் சக்தியையும் (நெகட்டிவ் ~எதிர்சக்தி) தூண்டிவிடுகின்றன.


சிவ வழிபாட்டின் போது யோனி முத்திரையைச் செய்வதால் இந்த இயக்கு சக்தியை (தேவி) வசீகரம் செய்ய முடியும்.


 பலர் புதிது புதிதாக திட்டங்களை தீட்டுவார்கள் ஆனால் அதை செயல்படுத்தும் திறனோ, சக்தியோ அவர்களிடம் இராது .உடலில்  "இயங்கு சக்தி "சரிவர செயல்படாத இதற்கு காரணமாக இருக்கும்.


சிலரிடம் சோம்பேறித்தனமும் மந்தத்தன்மையும் அதிகம் காணப்படும் எதையும் சுறுசுறுப்பாக செய்து முடிக்கும் "உந்துதல் "அவர்களிடம் இராது.


இத்தகைய நிலையில் உள்ளவர்கள் தொடர்ந்து யோனி முத்திரையை செய்து வந்தால் உடல் மனம் சுறுசுறுப்பாகும் எடுத்த வேலைகளை திறம்பட செய்து முடிக்கும் உந்துதல் உருவாகும்.


ஒருநாள் லிங்க முத்திரை ஒருநாள் யோனி முத்திரை என மாற்றி மாற்றிச் செய்தால் நிலை சக்தி ,இயக்கு சக்தி ஆகிய இரண்டும் தூண்டப்படும் மிக அற்புதமான பலன்கள் கிடைக்கும்.


                  🍁செய்முறை🔥


வணக்கம் கூறுவது போன்று, இரு கைவிரல்களையும் இணையுங்கள்.


இணைந்த பெருவிரல்களை, இணைந்த ஆள்காட்டி விரலுகளுக்கு இடையே இருக்கும் இடைவெளி வழியாக உள்ளே கொண்டுசென்று இணைந்த நடு விரல்கள் ,இணைந்த மோதிர விரல் கள் ஆகியவற்றின் நடுப்பகுதியைத் தொடும்படி வைத்துக் கொள்ளுங்கள்.


அழுத்தம் வேண்டாம் தொட்டுக் கொண்டே இருந்தால் போதும்.


முத்திரை கைகளை மார்புக்கு அருகில் வைத்துக் கொள்ளவும்.


               🌹அமரும் முறை🍓


நீங்கள் வழிபடும் முறையை பொறுத்து அமர்ந்தோ அல்லது நின்றுகொண்டோ செய்யலாம்.


முதுகும் கழுத்தும் வளைவின்றி நேராக இருக்கட்டும்.


                         🌲சுவாசம்🍂


இயல்பான நடையில் இருந்தால் போதும்..


ஆழமாகவும் சீராகவும் இருக்கட்டும்.


கும்பகம் வேண்டாம்.


              🕒எவ்வளவு நேரம்🕞


குறைந்த பட்சம் 8 நிமிடங்கள்


அதிகபட்சமாக 45 நிமிடங்கள் வரையிலும் செய்யலாம்.


                  📤பலன்கள்🕧


திட்டமிட்ட காரியங்களை திறம்பட செய்து முடிக்கும் சக்தி பிறக்கும்.


உடலும் மனமும் சுறுசுறுப்படையும்.


மந்தத்தன்மை சோம்பேறித்தனம் ஆகியவை மறையும்.


மனம் உற்சாகம் அடையும்.


குழந்தை வரம் வேண்டும் பெண்கள் இந்த முத்திரை செய்தபடி சிவவழிபாட்டில் தொடர்ந்து ஈடுபட விரைவில் குழந்தை வரம் கிடைக்கும்.


என்ன அன்பு முகநூல் நண்பர்களே இன்று யோனிமுத்திரை படித்திருப்பீர்கள் நாளை அட்சர மாலை முத்திரை.


நன்றி ஷா்மிளா ரவிக்குமாா்


🌍" பகிர்தல் " ஒரு மிகச்சிறந்த பண்பாடு மட்டுமல்ல.

வாழ்க்கையில் உயர்வான இடத்தை அடைய 

முக்கியமானதொரு ஆயுதமும் அதுதான்...🌏

Comments

Popular posts from this blog