🍀சித்தர்களின் யோக மார்க்கம் 🌿

திருமூலர் கூறுகிறார்




🌎அன்பு முகநூல் நண்பர்களே  "ஓம்"என்னும் வலைப்பூ தளம் ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன .அதை நீங்கள் கிளிக் செய்தால் "ஓம் "வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்🌏


https://www.facebook.com/om14422019/


"யோக சமாதி என்ற நிலைக்குள்ளே அலிலிடம் ,ஆன்ம ஒளி,

 ஆன்ம சக்தி எல்லாம் உண்டு .இந்த யோக சமாதியை உகந்து

 கூடுகிறவா்கள்   யாரோ அவர்களே சித்தர்கள் "என்று


"யோகச் சமாதியின் உள்ளேஅகலிடம்

யோகச் சமாதியின் உள்ளே உள ஒளி

யோகச் சமாதியின் உள்ளே உள் சக்தி

யோகச் சமாதி உகந்தவர் சித்தரே"

இது பாடல்.


"யோகத்தின் உடல் ஆடாமல் அசையாமல் இருக்க வேண்டும் காற்று மழை இடி மின்னல் மோதினும் பற்றிய கருத்தினில் மாறாக திருக்க வேண்டும் "என்றார் அவர்.


திருமாலும் , பிரமனும் ,தேவர்களும் முயன்று அடைய முடியாத உயரத்தில் இருக்கும் இறைவனை யோகம் பயின்று ஞானம் பெற்றவரால் உணர முடியும் என்பதை "ஊழிதோழி உணா்ந்தவா்க் கல்லால்..."  என்ற பாடலில் குறிப்பிடுகிறாா்.


அசைவற்ற சித்திரம் போல் உங்கள் மனம் அசைவற்று இருந்தால் இறைவனை உணர்ந்தறிவது சாத்தியம்.


சந்திர, சூரிய ,அக்கினியென்னும் மூச்சு டர்களைத் தனது உச்சியில் சேர்க்கும் யோகமே உண்மை தவம் .இதுவே மகாவாக்கியப் பொருள் .இதுவே விண்ணவர்க்குவது.


விரும்பி நின்றோர் செயில் மேய்த்தவ ராகும்


விரும்பி நின்றே செயின் மொய்யுரையாகும்


விரும்பி நின்றே செயின் மெய்த்தவ மாகும்


விரும்பி நின்றே செயின்  விண்ணவனாகுமே " 


என்று பாடுகிறார் திருமூலர்.


   🌿 அட்டாங்க யோகம் 🍁


இறைவனை அடைவதற்கு எந்த வழியைத் தேர்ந்தெடுப்பது என்று தடுமாற வேண்டாம்.   அட்டாங்க யோக நெறியில் நின்று சமாதியை அடையுங்கள்.


அவ்வாறு அந்நெறியில் ஞானம் பெறுங்கள் உங்களுக்குச் சிவப்பேறு வாய்க்கும் என்றார் திருமூலர்.


யோகம் 8 நெறிகளை கொண்டுதான் காரணமாகவே அடங்கா யோகம் என்ற அறியப்படுகிறது அவை~ இமயம் ,நியமம்,

 ஆதனம் ,பிராணாயாமம் ,பிரத்தியாகாரம், தாரணை ,தியானம் ,சமாதி ஆகும்.


இமயம் ~புலனடக்கம்

நியமம் ~ஒழுக்கத்தில் நிற்றல்

ஆதனம் (ஆசனம் ) ~இருக்கை

பிராணாயாமம் ~மூச்சை கட்டுப்படுத்துவதது.

பிரத்தியாகாரம் ~மனதை உள்ளே நிறுத்திப்  பழகுதல்

தாரணை ~உள்ளே நிறுத்திய மனதை்தை

 நிலைப்படுத்துதல்.

தியானம் ~இடைவிடாமல் நினைந்து இருத்தல்

சமாதி ~உயிரும் இறைவனும் ஒன்றி நிற்றல்.


1 இமயத்தில் நிற்பவர் தீயவற்றைச் செய்யக்கூடாது. கொல்லுதல், பொய் கூறுதல் , களவு செய்தல் ,கள்ளுண்ணல், காமுறுதல் இவற்றைத் தவிர்க்க வேண்டும் நல்லவனாய் பணி வுடையவனாய், நீதி தவறாதவனாய்  இருந்துகொண்டு பகிர்ந்து கொடுக்கி்ற பண்பும் ,குற்றமற்ற தன்மையையும் கொண்டவன் இமய ஒழுக்கங்களில் நிற்பவனாவான்.


2 பராசக்தியே தனக்குள் பாதியாய் கொண்டவன் சிவன். சிவசக்தி தத்துவத்தை உணர்ந்து முறைப்படி வணங்குவேன் நியாயமாய் இருப்பவன். சமயத்தில் நிற்பதற்குரிய குணங்களும் உள்ளும் புறமும் தூய்மையாக இருத்தல் அருளுடைமை ,ஊண்முதலியவற்றைச் சுருக்கி சிக்கனமாய் வாழ்தல், பொறுமை, நேர்மை ,உண்மை ,மானம் ,காமம் களவு கொலை இவற்றைத் தீமை என்று ஒதுக்குதல் ஆகும்.


நியமத்தை மேற்கொண்டவன் தவம், செபம் ,மகிழ்ச்சி ,தெய்வ நம்பிக்கை, கொடை, சிவ விரதம் ,முப்பொருளுண்மை கேட்டல் , வேள்வி ,சிவபூசை ,பேரொலி தரிசனம் என்ற பக்தி இணையும் கடைபிடிக்க வேண்டும்.


3 ஆதனம் என்கி்ற ஆசனங்கள் பலவகை. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை சுகாசனம் (சுவாத்திகம் )பத்மாசனம், பத்திராசனம், குக்குடாசனம் ,சிங்காசனம் ஆகும்.


சுகாசனத்தில் பொருந்தியிருக்கத் தலைவனாகலாம்.


பத்மாசனம் என்பது வலது பக்கத்தை தொடையின் மீது இடப் பக்க  தொடையின் மீது வலது காலையும் இமுத்து வைத்து,

 கைகளிரண்டையும் ஒன்றன் மீது ஒன்றாக மலர்ந்த பாவனையில் வைத்து நன்றாக நிமிர்ந்த பாவனையில் வைத்து , நன்றாக நிமிா்ந்த நிலையில்கண்கள் அசைவற நேர்முகமாய் நோக்குதல் ஆகும்.


பத்திராசனம்என்பது~ வலது காலை இடது பக்க தொடையின் மீது விளங்கும்படி வைத்து மூழந்தாள்களில் இரு கையையும் நீட்டி உடம்பை நேராக நிமிர்த்தி இருத்தல்.


குக்குட ஆசனம் ~பாதங்கள் இரண்டையும் தொடை மீது ஏற்றி, உடம்பின் பளுவை முழுங்கைதாங்குமாறுஅமைத்துஅசைவனறி்இருத்தல்.


சிங்காதனம் ~பாதநுனிகளைப் பூமியிலூன்றி,  முழங்காலில் கைகளை நீட்டி ,விருப்புடன் மேல்நோக்கி, குற்றமற்ற கண்கள் மூக்கின் நுனியை நோக்கியிருக்குமாறு செய்வது.


 4 பிராணாயாமம் 


"ஐவர் வாழும் ஊருக்கு ஒருவன் தலைவன் .அவன் குதிரை மீது ஊர்ந்து செல்பவன்" என்று ஏதோ புதிய போடுவதைப்போல் பிராணாயாமம் பற்றிச் சொல்கிறார் திருமூலர்.


"ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன்

உய்யக் கொண்டு ஏறும் குதிரைமற்று ஒன்று உண்டு

மெய்யர்க்குப் பற்றுக் கொடுக்கும் கொடாதுபோய்ப்

பொய்யரைத் துள்ளி விழுந்து விடும் தானே"


என்பது பாடல்


"ஐவர் வாழும் ஊர"் எனப்படுவது ஐம்பொறிகளையும் உறுப்பாய்க் கொண்ட உடலேயாாகும் ஆன்மா அதன் தலைவன்,அத்தலைவன் ஊர்ந்து செல்ல மனதுடன் பிராணன் என்ற குதிரை ஒன்று உள்ளது பிரபஞ்ச உணர்வுடையவா்க்கே பிராணனாகிய குதிரையை கட்டுப்படும். பிராணனைக் கட்டுப்படுத்த இயன்றவா்க்கே மனம் கட்டுக்குள் நிற்கும்.


"பிராண வாயுவை கட்டுப்படுத்தும் வகையறியாது மக்கள் மயங்குவார். நன்நெறி ஒழுகுவாரை சிவகுரு எழுந்தருளி வந்து ஆட்கொள்வான்.

 அவனுடைய திருவருளைப் பெற்றால்

 பிராணனை வயப்படுத்துதல் எளிது"

 என்கிறார் திருமூலர்


"ஆரியன் நல்ல குதிரை இரண்டு உள

வீசிப் பிடிக்கும் விரகு அறிவார் இல்லை..."


என்கிறது பாடல் வாிகள்.


ஆாியன்~ மனம், குதிரை இரண்டு~ அபானன் ,பிராணன் என்கின்ற இரண்டு வாயுக்கள்.


அபானன் ~உச்சத் தலத்தில் நிற்பது, தசவாயுக்களிலொன்று.


பிராணன் ~இதயத் தியங்குவது ,உயிர் காற்று.


"பறவையை விட வேகம் கொண்டது பிராணன் .அதன்வழி சிரசை நோக்கிச்

 செல்வதாயின்  கள்ளுண்ணாமலே சாதகனுக்கு மகிழ்ச்சி யுண்டாகும் "என்றார் திருமூலர் .பிராணாயாமப் பயிற்சியில் சாதகன் சோம்பல் நீங்கி, சுறுசுறுப்பு அடைகிறான்.


"பிராணனாகிய  உயிர்ப்பு மனதுடன் பொருந்தி ,அடங்கி இருக்குமாயின் பிறப்பு இறப்பு இல்லை.


பிராணாயாமம் என்பது வெளியே இருக்கும் காற்று இடது மூக்குத் துவாரத்தின் வழியாக உள்ளே இழுத்துக்

 கொண்டு பதினாறு மாத்திரை கால

 அளவு சுழிமுனை நடுவில் அதாவது நடு

 மூச்சியில் நிறுத்தி. பிறகு 32 மாத்திரை

 அளவு பிங்கலை நாடி வழியே

 விடுவதாகும்.


(பிங்கலை ~வலது மூக்கினிற்பது)

 


பிராணாயாமம் செய்யும் முறையைப் பற்றி திருமூலரின் திருமந்திரம் இப்படி கூறுகிறது.


"ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்

ஆறுதல் கும்பம் அறுபத்து நாலதில்

ஊறுதல் முப்பத் திரண்ட திரேசகம்

மாறுதல் ஒன்றின்கண் வஞ்சக மாமே"


பூரகம் ~உள்ளிழுத்தல்


கும்பகம் ~அடக்குதல் 


இரேசகம்~ வெளிவிடுதல்


பதினாறு மாத்திரை கால அளவு இடப்பக்கம் உள்ள நாசித்துவாரத்தில் காற்றை உள்ளிழுத்ல்  பூரகம்.64 மாத்திரை

 அளவு இழுத்த காற்றை உள்ளே

 நிறுத்தல் கும்பகம் ,32 மாத்திரை கால

 அளவு வலப்பக்க நாசி வழியே காற்றை

 மெல்ல விடுதல் இரேசகம். இது

 பிராணாயாம முறை.


மேற்சொன்ன முறைக்கு மாறாக

 வலப்பக்க நாசித்துவாரத்தில் காற்றை

 நிறுத்து , இடப்பக்க நாசித் துவாரத்தில் விடுதல் வஞ்சனை.


மூச்சை தனது கட்டுப்பாட்டில் வைக்கக் கற்றவனின் உடல் பளிங்குபோல் மாசற்ற தாய், தூய்மையுடன் இருக்கும் .அவன் முதுமை அடைந்தாலும் தொடர்ந்து இளமை தோற்றத்தில் காணப்படுவான் அவன் உடம்பு காற்றை விட மென்மை

 உடையதாகும் .அவனுக்கு எங்கும்

 செல்கிற ஆற்றல் உண்டாகும்.


இடது நாசியின் வழியே பிராண வாயு உள்ளே வாங்க உடம்புக்கு அழிவு இல்லை.


காற்றை கும்பகம் செய்யும் முறையை அறிந்தவர் காலனை( எமன்)க் கடக்கும்

 இலட்சியத்தை உடையவராவாா்.


உடலின் மேல் ,கீழ், நடு எனும் பகுதிகள்

 நிறையுமாறு உள்வாங்கி காற்றை

 அளவோடு வெளியிட்டு வயிற்றில்

 கும்பகம் செய்ய சிவனார் திருவருள்

 கிட்டும்.


"மேல் "என்றது தலை, கண் ,காது ."கீழ்"

 என்றது கால் பெருவிரல் முதலியன

" நடு "என்றது நெஞ்சகம், தொப்புள்

 இவற்றைக் குறிக்கும்.)


உடல் வளர்ச்சியிலும் படி அளவாகப்

 பிராணனைவெளியிட்டு, உடலுக்குச்

 செழுமையும் கொழுமையும் உண்டாக

 பத்துவகை நாடிகளும் விம்மும்படி

 காற்றை உள்ளிழுத்து நிரப்பி பிராணன்

 அபானன் என்பவை சேரப் பெற்று நேராய்

 நிமிர்ந்து இருக்க யமபயம் இல்லை.


உள்ளிருந்து புறப்பட்டு வெளியாகி,

 மீண்டும் உட்பகுதி திாியும் பிராணவாயுவை முறைப்படி தடுத்து

உள் நிறுத்தித் தூய்மை செய்வோர் உடம்பு

 பொன்னாய்  சிவக்கும் ,தலைமுடி கறுத்துத் தோன்றும்.


"பிராணனின் இயல்பை அறிந்து கொண்டால் இராப் பகலற்ற இடத்தில் (துரிய வெளி )இருக்கும் வாய்ப்பு சாதகருக்கு அமையும் "என்றார் திருமூலர்.


பிராணாயாமம் என்பது வெறும் மூச்சுப் பயிற்சி அல்ல அது பிராணனைக்

 கட்டுப்படுத்துவது பிராணனை அறிந்து

 கட்டுப்படுத்துபவன் உலகத்திலுள்ள 

எதையும்கட்டுப்படுத்தக்கூடியவனாகிறான் யோகியிடம் அந்த திறன் உண்டு.


பிராணனை வசப்படுத்துகிறவன் தன்னுடைய மனதைப் போலவே பிறருடைய மனங்களையும் அடக்குகிறான் தனது உடலைப் போலவே மற்றவர்களுடைய உடலையும் தனது ஆணைக்குக் கட்டுப்படச்செய்கின்றான் அவன்.


5" பிரத்தியாகாரம் "


மனத்தை வெளியே செல்லவிடாமல் உள்ளே நிறுத்திப் பழகுதவதால் இதனை

 அகத்தவப்பயிற்சி எனலாம்.


"எந்தப் பொருளை வேதங்கள் தேடிக் கொண்டு இருக்கிறதோ அந்தப் பொருளை நீங்கள் அகத்தே கண்டு இன்புற முடியும் "என்றார் திருமூலர்.


"கண்டு கண்டு உள்ளே கருத்துற வாங்கிடில்

கொண்டுகொண்டு உள்ளே குணம்பல காணலாம்

பண்டுஉகந்து எங்கும் பழமறை தேடியை

இன்று கண்டு இங்கே இருக்கலும் ஆ மே "

என்பது திருமந்திரம்.


வெளியே செல்லும் இயல்புடைய மனத்தை உள்ளே பொருந்தும்படி செய்துவிட்டால் ஒளி பெறுதல் அசாத்தியம்.


மூலாதாரத்தை தூண்டி தொழிற்படுத்தும் மந்திரம் "ஓம் "ஆகும் அது சிவனை

 அழைப்பதுடன் மனத்தை உள்ளிழுத்து

 நிலைநிறுத்துவதும் ஆகும்.


கொப்பூழுக்குப்( தொப்புள் )12 அங்குலம் கீழே உள்ளது மூலாதாரம்.


மூலாதாரத்திற்கு இரண்டு விரற்கடை மேலும் குறிக்கு இரண்டு விரற்கடை கீழே உள்ளது வட்டக் குண்டலி.


இது அழகும் ஆற்றலும் கூடிய செஞ்சுடர் உணர்வினுள்எழுவது.


"நாசிக்குக் கீழ் 12 அங்குல அளவில்

 உள்ளது இதயம். அவ்விடத்தே செஞ்சுடரை நினைத்து ,மனத்தை இழுத்து வைக்க பெருஞ் சித்திகள் கைகூடும். ராஜ யோகம் வாய்க்கும் "என்கிறார் திருமூலர்.


உயிரை மாயையினின்று பிாித்து சிவத்துடன்  சேர்ப்பதற்காய் அகத்தவத்தால் கரைதலும் ,உணர்வினுள் நோக்கலும் பிரத்தியகாரமாகும.் இது

 சாதகனுக்கு ஆனந்த பரவசத்தை உண்டு பண்ணும் .அவனுடைய உள்ளம் வலுவடையும்.


6 தாரணை


"மனம் புலன்களைப் பற்றிக் கொள்ளும்

 தன்மை உடையது. அதைக் கண்டபடி

 அலையவிடாமல் அடக்க வேண்டும்.

 அவ்வாறு அடக்கியபின் உணர்வுக் கண்

 கொண்டு ,நடு நாடி வழியே திருவருள்

 வெளியை உற்று நோக்குதல் வேண்டும்.

 அப்போது கண் காது முதலிய கருவிகளி

 ன்றியே காண்பதும் கேட்பதும்

 சாத்தியமாகும் .அது வாழ்நாள் கெடாமல்

 இருக்கச் செய்யும் வழி "என்கிறார் திருமூலர்


கோணா மனத்தைக் குறித்கொண்டு கீழ்க் காட்டி

வீணாத் தண்டு ஊடே  வெளியுறத்தான்நோக்கி

காணாக்கண் ,கேளாச் செவி என்று

 இருப்பார்க்கு

வாழ் நாள் அடைக்கும் வழி அதுவாமே"


இது திருமந்திரம் (வீணாத்தண்டு~ முதுகுத்தண்டு).


மனத்தை ஒரு வழி நிறுத்திய நிலையில் சிரசின் மேல் விளங்கும் சிற்சபையில் ஒளியோடு கூடிய சோதியைக் காணலாம்.


 மூலாதாரத்தில் இருக்கும் சிவனை,

 சிரசில் உள்ளசிற்சக்தியுடன்  இணையச் செய்தால் முதுமை மறைந்து இளமை ஏற்படும்.


.


பிராணன் இயக்கத்தைப் பொறுத்தே

 உடம்பில் உயிர் பொருந்தி நிற்கிறது

 உயிரில் பிராணனது இயக்கத்தைக் கட்டி

 நிறுத்திவிட்டால் உயிரானது உடலின்

 கண் நெடுநாள் நிற்கும் மனத்தை ஒரு

 வழி நிறுத்தும் பயிற்சியால் பிராணனைக்

 கட்டி நிறுத்தலாம்.


"மனத்தினின்றும் இறங்கி ஆங்காரத்தால் வெளியேறும் வாயுவை வெளியே

 செல்லாதபடி ,நடுநாடியில் (முதுகுத்தண்டு )செலுத்த, ஏழு

 சாளரங்களையும் இரண்டு பெரிய

 வாயில்களயும் கொண்டபெரும்பள்ளி

 அறையிலே பல காலம் வாழலாம் என்றார் சித்தர்.


"வாழலுமாம் பலகாலும் மனத்திடை

போழ்கின்ற வாயுப் புறம்படாப் பாய்ச் சுறில்

ஏழு சாலேகம் இரண்டு பெருவாய்தல்

பாழி பெரியது ஒர் பள்ளி அறையிலே "

இது திருமந்திரம்


ஏழு சாலேகம் ~இரண்டு கண,் இரண்டு காது, இரண்டு நாசி ,வாய் என ஏழு துவாரங்கள்.


இரண்டு பெருவாய் ~எருவாய் ,கருவாய்.


மனத்தை அடக்கும் உபாயம் பொறிகளின்

 எல்லையைத் தாண்டி நிற்பதுதான்.


7 தியானம்


இடைவிடாது நினைந்திருத்தல்


புருவ நடுவினை உற்றுப் பார்த்திட மெய்யுணர்வு ஒளி வெளிப்படும் .இரு கண்களை சேர்த்து மனதைப் பொருத்திட 

 அது சாத்தியமாகும்.


தியானம் என்பது சிவனைச் சிந்தனையில் வைப்பதன்றி வேறேயென்ன என்று கேட்கிறார் திருமூலர்.


"மனத்தில் விளங்கும் சோதியை மேலெழுப்பி, சினம் என்கி்ற தீ நீங்குமாறு செய்யவேண்டும் எல்லாவற்றையும் விளக்கி நிற்கும் .சிவ ஒளியை சுழுமுனை என்கின்ற திரியைத் தூண்டி நடத்த சிவமானது மங்காத தீபமாய் மனத்தில் ஒளி விடும"் என்றார் அவர்.


"மனத்து விளக்கினை மாண்பட ஏற்றிச்

சினத்து விளக்கினை செல்ல நெருக்கி

அனைத்து விளக்குந்  திாியொக்கத்  தூண்ட

மனத்து விளக்கது மாயா விளக்கே"

என்பது பாடல்

தியானத்தில் முக்குணங்களாகிய இருள்நீங்கி உச்சியில் ஒளி காணும்.


8 சமாதி


உண்மையைத் தொடர்ந்து ,விடாது பற்றி நிற்றலே சமாதி.


பகுத்தறிவுக்குப் பொருத்தமான, விழிப்புணர்வுடன் கூடிய அமைதியான மனநிலையே சமாதி.


சமாதி நிலைக்கு முயல்கி்றவர் சில நியதிகளைக் கடைப்பிடிக்க வேண்டியிருக்கும்

அவை


அமைதியாக இருத்தல்

சுயக் கட்டுப்பாடு

பொருள்களில் பற்று ,உணர்வெழுச்சி இல்லாது இருத்தல்

இடர்பாடுகளை எந்தவித எதிர்ப்பும் இன்றி ஏற்றுக் கொள்ளுதல்

இருப்பதைக் கொண்டு திருப்தி அடைதல்.


தீமைகள கற்றி நன்மைகள் செய்யும் இமய, நியம முறைகளால் சமாதி

 நிலைக்கு வாய்க்கும்." என்றார் திருமூலர்.


"விந்து "என்கி்ற ஒளியும்  "நாதம்" என்கிற ஒளியும் சஹஸ்ரதளத்தில் (உச்சி) மிகுந்து

விளங்கினால் யோகமான சமாதியில் சிவன் பொருந்தியிருக்கும் அப்போது ஞான வடிவான சிவன் அழகிய ஜோதியாய் வெளிப்படுவான்.


மனம் எங்கு உள்ளதோ அங்கே பிராண இயக்கமும் உண்டு. மனம் நினைக்க வில்லை எனில் பிராண வாயுவின்

 அசைவும் ஏற்படாது நினைப்பதை விட்ட

 மனம் அகப்பொருளை கண்டு மகிழும்.


"மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு

மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை

மண் மனத்துள்ளே மகிழ்ந்திருப்பாா்க்கு

மன்மனத் துள்ளே மனோலய மாமே"


என்று பாடுகிறார் திருமூலர்.


யோகியர் தேடுதலற்ற விழிப்பு நிலையில் இருப்பவர்கள் அவர்கள் பிராணனை

புறஞ்செல்ல வொட்டாது அகமுகப்படுத்தவிடுவா்.


"வீணான எண்ணங்களை விட்டு மூலக்கனல் வழியே சென்று, சிவத்தை தேடி மதி மண்டலத்தில் பொருள்கள் தான்

 என்றும் சிவன் என்றும் பேதமின்றி

 பொருந்தி நிற்பதே சமாதி ஆகும் "என்றார் அவர்.


அட்டாங்க யோகத்தால் அடையக்கூடிய நன்மைகளையும் திருமூலர் பட்டியலிடுகிறார்.


சஹஸ்ர தளத்தில் ஒளியாய் நிற்கும் திருவடியை நயந்தவா்க்கு வேண்டியது வேண்டியவாறு அமையும் இயமம்.


சிவனார் திருவடி பற்றி நின்று ,அன்புடன் சிவத்தினை அறிந்து சிந்தித்திருப்பவர்க்கு. முனிவர்களும்

 எதிர்கொண்டு அழைக்கத்தக்க சிவபதம்

 கிடைக்கும் ~நியமம்.


சிவத்தை நோக்கிச் செய்கி்ற தவத்தின்

 சிறப்பு இம்மையிலே இன்பம் பெறுவதாகும்.


சிவனும் தானும் வேறல்ல என்று உணரும் பக்குவ நிலையில் சிவபதம் கிட்டும்~ பிராத்தியாகாரம்.


பிரணவத்தை உபாசிக்கிறவா்  எங்கும் செல்ல வல்ல சித்தர் ஆவார் தாரணை.


சமாதியின் பயனை இப்படி விவாதிக்கிறது திருமந்திரம்.


"காரியமான உபாதியைத் தான் கடந்

தாரிய காரணம் எழுந்தன் பாலுற

ஆரிய காரண மாய தவத்திடைத்

தாரியல் தற்பரஞ் சேர்தல் சமாதியே"


ஆத்மாக்களுக்கு ஆணவமல மறைப்பால் உண்டாகும் உபாதைகள் 7 அவை:− இறையின்மை ,அற்ப அறிவுடைமை, அளவு பட்ட தன்மை ,மாயையோடு  கூடிய தன்மை ,குறைந்த அளவிலான ஆற்றல், சுதந்திரமின்மை ,கண்டறியும் திறன் இன்மை ஆகும்.


சிவனது உபாதி செயல்கள் 7 அவை இறைமை ,முற்றறிவு எங்குந்தானாதல் ,மாய இன்மை அளவு கடந்த ஆற்றல் ,தன் வயப்படுதல் ஒன்றியு ணர்வதால் ஆகும்.


ஆத்மா உபாதை எழும் நீங்கி ,சிவனின் உபாதி ஏழும் பொருந்தி தவத்தில் இயங்கும் தன்மை உடைய பொருளைச் சேர்வதே சமாதியின் பயன்..


🍁சர்வம் சிவார்ப்பணம் எதுவும் எனக்கு இல்லை இறைவா எல்லாம் உமக்கே என்பது இந்த சர்வம் சிவார்ப்பணம் அர்த்தம் சர்வமும் சிவார்ப்பணம் 🍁

Comments

Popular posts from this blog