🌏புருவ மத்தி என்பது எது?🌎
ஆன்மீகத்தில் சிறிது நாட்டம் உள்ளவர்களிடம் தியானம் நாம் எங்கு செய்ய வேண்டும் என்று கேட்டால் கூறுவது மனதை புருவ மத்தியில் நிலை நிறுத்துங்கள் என்று கூறுவர்.
சித்தர்களும், ஞானிகளும் இதையே தான் “புருவ மத்தியில் தியானம் செய்யுங்கள் என்று தான் கூறுகின்றனர் “.
புருவமத்தி எது என்று சாதரணமாக யாரிடம் கேட்டாலும் “புருவமத்தி” என்று நாம் நெற்றியில் பொட்டு வைக்கும் இடத்தை கூறுவர்.
இன்று பல யோகா மையங்களும் இதையே தான் கூறுகிறது.
புருவமத்தி என்றால் பொட்டு வைக்கும் இடமா என்றால் அது தான் இல்லை?
சிறிது சிந்தித்து பார்த்தல் இது புலப்படும்.
அதற்கு முன் அவ்வை பிராட்டி நமக்கு கூறும் இந்த பாடலை நினைவில் கொள்ளுங்கள் ”
“தேவர் குறளும் திருநான் மறை முடிபும்
மூவர் தமிழும் முனி மொழியும் – கோவை
திருவாசகமும் திருமூலர் சொல்லும்
ஒரு வாசகம் என்று உணர்”
திருக்குறள் நான்கு வேதங்கள் தேவாரம் அகத்தியர் முதலான சித்தர் பாடல்கள் திருவாசகம் திருமந்திரம் இவை அனைத்தும் உரைப்பது ஒரு வாசகம். மெய். உண்மை. சத்தியம். மெய்பொருள்.
So it is clear that the wise and the wise men would say meditation in one place.
Well, let's think about what is the first eyebrow?
We are the place where the bullet is two eyebrows
“கையற விலாத நடுக்கண் புருவபூட்டு கண்டு களி கொண்டு திறந்து உண்டு நடு நாட்டு.” என்று வெட்ட வெளிச்சமாக்கி விட்டார். “நடுக்கண் தான் புருவபூட்டு” இதற்கு விளக்கமும் வேண்டுமோ.
மேலும் வள்ளலார் தான் இரு கண்களாலும் செய்த பெரும் தவத்தை தானே வியந்து போற்றுகிறார்.
“என்னிருகண் காள்உமது பெருந்தவம்எப் புவனத்தில் யார்தான் செய்வர்”
தன் கண்ணில் தான் தானும் தவம் செய்தேன் என்று வள்ளலாரே குறிபிடுகிறார்:
இதை திருமூலர் திருமந்திரத்தில் பரிபாசையாகவும், நேரடியாகவும் குறிபிடுகிறார்:
“நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்
வாட்டம் இல்லை மனைக்கும் அழிவில்லை “
இங்கு திருமூலர் நமது நாட்டம் நடுமூக்கில் வைக்கணும் என்கிறார். ஒரு சித்தர் புருவமத்தி என்றார், இங்கு திருமூலர் நடுமூக்கு என்கிறார். எது சரி. அவ்வை பிராட்டி கூறிய முதல் பாடலை நினைவு கொள்ளுங்கள்.
நடுமூக்கு – இது பரிபாசை. ஞானத்திற்கு பொருள் காணனும்.! மேலோட்டமாக பார்த்து மூக்கு என்று ஏமாந்து போகாதீர். மூக்கை பார்த்து மோசம் போனவர் ஏராளம். இதன் விளக்கம் என்ன?
தண்ணீர் ஊற்றும் பாத்திரம் உண்டல்லவா அதில் நீர் வரும் பகுதியை மூக்கு என்று தானே சொல்வோம். நமக்கு கண்ணீர் வரும் கண்ணே மூக்கு அதன் நடுபகுதியே ஊசிமுனை துவாரம் உள்ளதாகும் அதனுள் தான் ஊசிமுனை அளவு ஜோதி உள்ளது! இதில் தான் நம் நாட்டம் இருக்க வேண்டும். கண் என நேரடியாக சொல்லாமல் நடுமூக்கு என்றது நாம் சிந்தித்து தெளிய வேண்டும். குரு மூலம் உபதேசம் பெற்று தெளிய வேண்டும் என்பதற்காக. தான்.
மேல் கூறிய விளக்கத்திற்கு சான்று மற்றும் ஒரு திருமந்திர பாடலே
“நாட்டத்தை மீட்டு நயனத் திருப்பார்க்குத்
தோட்டத்து மாம்பழந்தூங்கலு மாமே”
நயனம் என்றால் கண். இதற்கு மேலும் விளக்கம் தேவை இல்லை.
மற்றுமொரு பாடல் திருமந்திரத்தில் இருந்து. தவம் எப்படி செய்ய வேண்டும் என்று கூறும் பாடல். இப்பாடலை படிக்கும் முன் “உடலில் உயிர் எங்கு உள்ளது “என்று இந்த லிங்கை படித்த பின் பார்க்கவும்”
“நெற்றிக்கு நேரே புருவத் திடைவெளி
உற்றுற்றுப் பார்க்க ஒளிவிடு மந்திரம்
பற்றுக்குப் பற்றாய் பரம – னிருந்திடம்
சிற்றம் பலமென்று சேர்ந்துகொண் டேனே”
நெற்றிக்கு நேரே புருவத் திடைவெளி இதை நாம் உற்று உற்று பார்க்க வேண்டும். கிணற்றை உற்று பார்த்தான் என்றால் கிணற்றில் உள்ளே பார்த்தான் என்று தானே பொருள். நெற்றிக்கு நேரே புருவத்திடைவெளி உள்ளே இரு கண்களும் உள்ளே போய் சேருமிடம் நம் ஆத்மஸ்தானம். அதை தான் உற்று உற்று பார்க்க ஒளி விட்டு பிரகாசிக்கும் என திருமூலர் சொல்கிறார். அது தான் ஒளி தான் மந்திரம். அந்த நம் ஜீவஸ்தானம் தான் பரமன் இறைவன் இருக்குமிடம். நம் உயிரை பற்றி உடலை பற்றி இருக்கும் இடம். அதுவே சிற்றம்பலம் கோயில் என தெரிந்து கொண்டேன். நம் கண்மணியை பற்றியிருக்கும் ஒளி உள் ஒளி அம்சம். கண்மணி ஒளி வழி உள்ளே புக வேண்டும். குரு மூலம் உபதேசம், தீட்சை பெற்று கண் ஒளியை பற்றி உள் போக வேண்டும். இதுவே ஞானம். கண்ணை மூடி கொண்டு உற்று உற்று என பார்த்தாலும் மாயை தான் விளையாடும். கண்ணை திறந்து கண்மை ஒளியோடு போ.
மேலும் பல ஞானிகள் புருவமத்தியான கண்ணை இருதயம் என்பர். இருதயம் என்பதை பிரித்து பாருங்கள் இரு+ உதயம் . நம் உடலில் வலது கண் சூரியன், இடது கண் சந்திரன், ஆக இதை தான் இந்த சூரிய , சந்திர உதயத்தை தான் இரு உதயமாக (இருதயமாக) கூறி உள்ளனர் ஞானிகள். இதை சிவவாக்கியர் எந்த ஒளிவு மறைவுமில்லாமல் கூறி உள்ளார்.
“வலது கண் சூரியன் இடது கண் சந்திரன்”
கீதையிலும் கிருஷ்ண பகவான் “மந்திரங்களில் நான் காயத்ரி” என்கிறார். காயத்ரி மந்திரத்தின் சாராம்சம் “கடவுளின் ஒளியை தியானிப்போமாக என்பதே.” கண்ணன் என்ற தமிழ் வார்த்தை நம் உடலில் இறைவன் துலங்குவதை குறிக்கும். கண் + அவன் = கண்ணன். ஆகா இந்த கண்ணனை – கண் ஒளியை தான் நாம் தியானிக்க வேண்டும்.
இப்படி அனைவரும் கூறுவது ஒன்று தான்.
கண் ஒளியை பற்ற உங்களுள் கடந்து செல்ல குருவிடம் உபதேசம் தீட்சை பெறுங்கள்.
நன்றி..!
===========
“நெற்றிக்கு நேரே புருவத் திடைவெளி
உற்றுற்றுப் பார்க்க ஒளிவிடு மந்திரம்
பற்றுக்குப் பற்றாய் பரம – னிருந்திடம்
சிற்றம் பலமென்று சேர்ந்துகொண் டேனே”
நெற்றிக்கு நேரே புருவத் திடைவெளி இதை நாம் உற்று உற்று பார்க்க வேண்டும். கிணற்றை உற்று பார்த்தான் என்றால் கிணற்றில் உள்ளே பார்த்தான் என்று தானே பொருள். நெற்றிக்கு நேரே புருவத்திடைவெளி உள்ளே இரு கண்களும் உள்ளே போய் சேருமிடம் நம் ஆத்மஸ்தானம். அதை தான் உற்று உற்று பார்க்க ஒளி விட்டு பிரகாசிக்கும் என திருமூலர் சொல்கிறார். அது தான் ஒளி தான் மந்திரம். அந்த நம் ஜீவஸ்தானம் தான் பரமன் இறைவன் இருக்குமிடம். நம் உயிரை பற்றி உடலை பற்றி இருக்கும் இடம். அதுவே சிற்றம்பலம் கோயில் என தெரிந்து கொண்டேன்.
நம் கண்மணியை பற்றியிருக்கும் ஒளி உள் ஒளி அம்சம். கண்மணி ஒளி வழி உள்ளே புக வேண்டும். குரு மூலம் உபதேசம், தீட்சை பெற்று கண் ஒளியை பற்றி உள் போக வேண்டும். இதுவே ஞானம். கண்ணை மூடி கொண்டு உற்று உற்று என பார்த்தாலும் மாயை தான் விளையாடும். கண்ணை திறந்து கண்மை ஒளியோடு போ.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
கொல்லா நோன்பு குவளையமெல்லாம் ஓங்குக!!
நன்றி சர்மிளா ravikumar
Comments
Post a Comment