🌏நோய்களை நீக்கும் திருநீர் 🌎




திருநீறு அணிவதால் என்ன பயன் என்பதற்கு நிறைய காரணங்கள் சொல்லப்பட்டாலும், அதற்கு பின்னால் உள்ளது மருத்துவ உண்மை. முறைப்படி தயாரான திருநீறு மிகச் சிறந்த கிருமிநாசினி. குறிப்பாக, தலைக்குக் குளித்ததும் நெற்றி நிறையத் திருநீறு பூசுவார்கள். இதனால் சளி பிடிக்காது. நெற்றிப் பகுதியில் உள்ள நீரை, வியர்வையை உறிஞ்சக்கூடிய தன்மை திருநீறுக்கு உண்டு. இதனால் சளி மட்டுமல்லாமல் தலைவலியும் ஏற்படாது.


🌎அன்பு முகநூல் நண்பர்களே  "ஓம்"என்னும் வலைப்பூ தளம் ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன .அதை நீங்கள் கிளிக் செய்தால் "ஓம் "வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்🌏


https://www.facebook.com/om14422019/




திருநீறு ஆன்மிகம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல; மிகச்சிறந்த மருந்தும் கூட. நமது உடலிலுள்ள கெட்ட நீரை உறிஞ்சி வெளியேற்றுவதற்காக மூலிகைகளைக்கொண்டு சித்தர்களால் உருவாக்கப்பட்டது திருநீறு. மூன்றுவிதமான பொருட்களை நெருப்பில் எரித்து, அதிலிருந்து பெறப்படும் சாம்பலே திருநீறு என்று கூறப்படுகிறது. பெரும்பாலும் நமக்குக் கிட்டுவது சித்தர்கள் கூறிய திருநீறல்ல. இது ஒருவகை வெண்ணிற மண்ணாகும். 





திருநீற்றுப் பச்சிலைகளையும், வில்வப்பழ ஓட்டையும் நன்கு அரைத்துக் கொண்டு, அதனை பசுஞ்சாணத்துடன் நன்கு கலந்துகொள்ள வேண்டும். பிறகு இந்தக் கலவையை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வெயிலில் நன்கு காய வைக்கவேண்டும். நன்றாகக் காய்ந்ததும் அவற்றை ஒன்றாக அடுக்கிவைத்து நெல் உமியால் மூடி, நெருப்பில் புடம் போடவேண்டும். எருமுட்டை நன்கு வெந்து, தீ தணிந்த பிறகு, இந்த சாண உருண்டைகள் வெண்மையானதாகிவிடும். நன்கு வெந்த இந்த சாண உருண்டைகளை எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும். தேவையானபோது ஒரு உருண்டையை எடுத்து தூளாகச் செய்து, அந்தத் தூளை மெல்லிய துணியில் சலித்தால் மிகவும் மென்மையான திருநீறு கிடைத்துவிடும். இதுதான் உண்மையான திருநீறாகும்.





இதனை நமது நெற்றியிலும், தோள், முழங்கை, மணிக்கட்டு, இடுப்பு, முழங்கால் என நம் உடம்பில் எலும்புகள் இணையும் மூட்டுப் பகுதிகளிலும் தினமும் பூசி வந்தால், அந்த மூட்டுப்பகுதிகளில் தேங்கி நிற்கும் கெட்ட நீரை உறிஞ்சி படிப்படியாக வெளியேற்றிவிடும். இதனால், எலும்புத் தேய்மானம், சவ்வு கிழிதல் போன்ற மூட்டு சம்பந்தமான வலிகள், நோய்கள் நீங்கிவிடும்.





தொடர்ந்து பயன்படுத்தினால் அந்த நோய்கள் வராமல் தடுக்கப்பட்டுவிடும். தற்போது பசுஞ்சாணத்தை எரித்து திருநீறு தயாரிக்கப்படுகிறது. சில ரசாயனப் பொருட்கள் மூலமும் தயாரிக்கப்பட்டு கடைகளில் விற்கப்படுகிறது.





Comments

Popular posts from this blog