🌀உங்கள் கனவில் இறந்தவர்களைக் கண்டால் அதற்கு என்ன பலன் தெரியுமா?🌼




🌎அன்பு முகநூல் நண்பர்களே  "ஓம்"என்னும் வலைப்பூ தளம் ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன .அதை நீங்கள் கிளிக் செய்தால் "ஓம் "வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்🌏


https://www.facebook.com/om14422019/


இரண்டு தினங்களுக்கு முன்னால் என் கனவில் ஒரு வயோதிகர் வந்தார். இதிலென்ன ஆச்சரியம் என்று நினைக்கிறீர்களா? அவருக்கு கிட்டத்தட்ட 150 வயதிருக்கும். பழுத்த பழமாக இருந்த அவர் எங்கள் புதுவீட்டின் சன் ஷேடில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். இப்படியொரு கனவு ஏன் வந்தது என்று ஒரே குழப்பம். கனவுகளுக்கு உண்மையில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா?

                                                                    

நம் உறவினர்கள், நண்பர்கள், நம்முடன் பழகியவர்கள், நமக்குத் தெரிந்தவர்கள், மனதுக்கு நெருக்கமானவர்கள், பிடித்தவர்கள், பிரபலங்கள் போன்றவர்கள் மரணித்தால் அது நம்மால் தாங்க முடியாது. சில சமயம் இரவு நேரங்களில் நம் கனவில் அவர்களின் உருவம் வருவது இயல்பு. அதற்கான பலன் என்ன?


இயற்கையாக மரணமடைந்தவர்கள் கனவில் வந்தால் எவ்வித பிரச்னையும் இல்லை. நல்ல பலன்கள் கிடைக்கும் என்கிறது ஜோதிடம் மற்றும் கனவுகள் தொடர்பான ஆராய்ச்சி நூல்கள். சிக்மெண்ட் ப்ராய்ட் கனவு குறித்து விரிவாக ஆராய்ச்சி செய்து ஒரு நூலை வெளியிட்டுள்ளார். என் கனவில் வந்தது போல் வயதானவர் வந்தால் அவர் முன்னோராக கூட இருக்கலாம். வயது முதிர்ந்து, பேரன், பேத்தி எடுத்து நன்றாக வாழ்ந்து மரணமடைந்த முன்னோர்கள் கனவில் வந்தால் அதனை ஆசி எனக் கருத வேண்டும் என்கிறது கனவுகளைக் குறித்த ஆதிக் குறிப்பொன்று.


இதற்கு மாறாக துர்மரணம் அடைந்தவர்கள் கனவில் வந்தால் சில பிரச்னைகள் ஏற்படலாம். உடல் நலம் குறைதல், விபத்து, குடும்பத்தில் சண்டை, சச்சரவு, நண்பர்களுடன் வாக்குவாதம், பிரிவு உள்ளிட்டவை ஏற்படக்கூடும்.


இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க குலதெய்வக் கோயில் வழிபாடு, கோயில் அல்லது அனாதை விடுதிகளில் அன்னதானம், வஸ்திர தானம் உள்ளிட்ட தான தர்மங்களைச் செய்யலாம். வயதானவர்கள், பெரியவர்கள், ஆன்மிக குருமார்கள் இயற்கை எய்திய பின் கனவில் வந்தால் கவலை வேண்டாம். அது உங்களுக்கான ஆசிர்வாதம்.


🌷நன்றி சர்மிளா ரவிக்குமார்


🌍" பகிர்தல் " ஒரு மிகச்சிறந்த பண்பாடு மட்டுமல்ல.

வாழ்க்கையில் உயர்வான இடத்தை அடைய 

முக்கியமானதொரு ஆயுதமும் அதுதான்...🌏

Comments

Popular posts from this blog