🌏4 க்குடையவன் தரும் நல்ல யோகம் 🌎






அன்பு முகநூல் நண்பர்களே பிரகதீஸ்வரர் வரும் பதிப்புகள் உடனுக்குடன் உங்களுக்கு வந்து சேர கீழே உள்ள பட்டனை அழுத்தி உங்கள் வலைப்பூ தரத்தில் வரமுடியும் வந்தவுடன் விரல் மாதிரி அமைப்பு உள்ள பட்டனை அழுத்தினால் நீங்கள் எங்கள் வலைப்பூ தனது வலைத்தளத்தில் இணையலாம் நாங்கள் அனுப்பும் பதிப்புக்கள் உடனுக்குடன் உங்களுக்கு வந்து சேரும் சர்வம் சிவார்ப்பணம்


https://www.facebook.com/brihadeshwara/


🌷பொருள்:−


மாதுரு ஸ்தானம் என்று சொல்லப்படும் 4-ஆம் இடத்துக்கு உடையவன் அவ்விடத்திலேயே நின்றிருந்தால் அது ராஜயோகம் .வெவ்வேறு கிரகங்களைப் பொறுத்து அந்த ராஜயோகத்தின் தன்மைகளும் பெயர்களும் மாறுபடுகின்றன.


அவற்றின் பெயர் வருமாறு:−


🌺நாலுக்குடையவன் செல்வநாயகி நாலாமிட த்திலேயே அமர்ந்து இருந்தால் அது ருசி யோகம்.


🌼நாலுக்குடையவன் புதனாகி அவ்விடத்திலேயே நின்றிருந்தால் அது பத்ர யோகம்.


🍁 நாலுக்குடையவன் குருவாகி அங்கேயே

 வீற்றிருந்தால் அது அங்கிச யோகம்.


 🌀 நாலுக்குடையவன் சுக்கிரன் ஆகி அந்த ஸ்தானத்திலேயே மேவியிருந்தால் அது மாளுவ யோகம்.


🌿நாலுக்குடையவன்  சனியாகி,அவ் வீட்டிலேயே தங்கியிருந்தால்  அது சகர யோகம்.


🔥குறிப்புரை:−


மாதுருதானம் ~தாயைப் பற்றி அறிய உதவுவதாகிய  நாலாம் இடம்.


இது அருணகிரிநாதருடைய ஜாதகமாகும். இதில் லக்னத்திற்கு 4ம் உடையவன் குருவாகி, அங்கேயே தங்கி நிற்பதால் அங்கிச யோகம் ஏற்படுள்ளது.


என்ன அன்பு முகநூல் நண்பர்களே "ராஜயோகம் என்று சொல்லிவிட்டு ஒரு சன்னியாசி உடைய ஜாதகத்தை காட்டுகிறீர்களே" என்று என்னால் எண்ணாதீர்கள் என்ன?


நேசர்களே, ராஜயோகம் ஜாதகத்தில்

 இருந்தால் ராஜாவாகத்தான் ஆக

 வேண்டும் என்ற அவசியமில்லை. அந்த

 யோகம் அந்த ஜாதகரை ஏதாவது ஒரு

 விதத்தில் சிறப்பு பெற வைக்கும்

 என்றுதான் நாம் கொள்ள வேண்டும் அது

 எந்த வித சிறப்பு என்பதை மற்றக்

 கிரகங்களின் அமைப்பைக் கொண்டு

 தான் தீர்மானிக்க வேண்டும்.


இந்த ஜாதகத்தை பொருத்தவரை, வித்தை ஸ்தானம் எனும் 4-ஆம் இடத்து அதிபதி குருவும் நாலாம் இடத்திலேயே

 ஆட்சி பெற்று ,உடன் தமிழ்க்

 கிரகங்களான சந்திரன் மற்றும்

 செவ்வாயின் சம்பந்தம் பெற்று

 இருப்பதுடன் ,9 ,10 ,க்குடையவா்களான

 சூரியன்~ புதன் பரிவர்த்தனையும்

 ஆகியிருப்பதால் இவர் ஈடு இணை

 இல்லாத இணையற்ற தமிழ் இசை

 தமிழ்ப் புலமை உடையவராய் மிளிா்ந்தார். இவர் பாடிய திருப்புகழ்

 பாடல்கள் வானம் உள்ள வரை இவரது;

 வற்றாத தமிழ் புலமையைப் பறை

 சாற்றிக் கொண்டே இருக்கும.் புலவர்

 மட்டுமல்ல; பொய்யாமை மயக்கம்

 தெளிந்த மகான் ஞானி ஞானம் பெற்ற

 தற்கான அமைப்பு ஜாதகத்தில் தெள்ளத்

 தெளிவாக உள்ளது .அது தனி

 ஆராய்ச்சி, ஆதலால் இங்கேவேண்டாம்.


🍓நன்றி

Astrologer: S.ANAND,

ERODE JOTHIDA PARIPALANA MADAM,

             218,Brough road,           

Behind chamundi Mediacals,

P.S.Park,ERODE-638001.

📱 +91   93 64 35 23 97


🌍" பகிர்தல் " ஒரு மிகச்சிறந்த பண்பாடு மட்டுமல்ல.

வாழ்க்கையில் உயர்வான இடத்தை அடைய 

முக்கியமானதொரு ஆயுதமும் அதுதான்...🌏



Comments

Popular posts from this blog