🍁சித்த மருத்துவ குறிப்புகள்:-121 to 140💥


🌺வாழ்க்கைக்கு அன்றாடம் தேவையுள்ள சித்த மருத்துவ குறிப்புகள் 1000 ஓம் வலைப்பூ தளம் இடம்பெற்றுள்ளன மிக சாதாரண நோய் முதல் மிகக் கொடிய நோய்களுக்கு கூட மருந்துகள் கூறப்பட்டுள்ளன எல்லாருடைய வீட்டிலும் பாதுகாப்பை பயன் படக்கூடிய குறிப்புகள் இதில் உள்ளன.🍁




🌎அன்பு முகநூல் நண்பர்களே  "ஓம்"என்னும் வலைப்பூ தளம் ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன .அதை நீங்கள் கிளிக் செய்தால் "ஓம் "வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்🌏


https://www.facebook.com/om14422019/


எச்சிற் புண் மாற :−


வாயின் ஓரங்களில் எச்சிற் புண்  வரும் இந்த புண்ணுக்கு துளசி இலையை சுத்தம் செய்து தேங்காய் எண்ணெயுடன் கலந்து தடவி வர புண்குணமாகும்.


காலையில் ஏற்படும் இருமலுக்கு:−


 கடுகை மைய இடித்து தூள் செய்து வைத்துக்கொண்டு இருமல் இருக்கும் போது ஒரு சிட்டிகைத் தூளுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட இருமல் குறைந்து நிவாரணம் கிடைக்கும்.


சிறுநீர் காரணமாக போக:−


 சிலருக்கு சிறுநீர் சொட்டுச் சொட்டாகப் போகும் .இது மிகுந்த உடல் சூட்டின் காரணமாக இப்படி போகிறது. இதற்கு செண்பகப் பூவை நாலு அல்லது ஐந்து எடுத்து 50 மில்லி தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து காலை மாலை இருவேளை குடித்து வர தாராளமாக சிறுநீர் போகும்.


பித்தம் குறைய:−


சிறு வெங்காயத்தை சிறிது வெல்லத்துடன் சேர்த்து நெய்விட்டு வதக்கி சாப்பிட பித்தம் குறையும்.


வியர்வை அதிகமாக போவதை தடுக்க:−


காக்கணா செடியின் இலைகளின் சாறுடன் தேன் கலந்து இஞ்சி சாறும் சம அளவு கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வேர்வை அதிகம் வெளியேறுவதைத் தடுக்கலாம்.


உடல் பருக்க நினைப்பவர்களுக்கு:−


பறித்த பச்சை நிலக்கடலை 100 கடலையும் நேந்திரம் வாழைப்பழம் ஒன்றும் ஒரு கப்பில் பாலிலும் தினசரி சாப்பிட்டு வர உடல் விரைவில் பருவம்.


உடல் வழுவழுப்புடன் பலபலக்க:−


 ஆவாரம் பூ இடையே தூள் மற்றும் கடலைமாவு இந்த இரண்டையும் குளிக்க தேவையான அளவு எடுத்து மைய அரைத்து உடல் முழுக்கத் தேய்த்துக் குளித்து வர 10 நாட்களில் பலன் காணலாம்.


உடல் பருமன் குறைய:−


கேரட் தினசரி சமையலில் சேர்த்துக் கொள்வது தான் இரண்டு டம்ளர் மோருடன் இரண்டு காரட்டையும் போட்டு  மைய அரைத்துக் குடித்துவர வாரத்தில் லிருந்து உடல் இளைக்க ஆரம்பித்து விடும் .போதும் என்ற நிலை வந்தவுடன் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.


கக்குவான் இருமல் போக்க:−


சோடா உப்பை தண்ணீரில் கலந்து குடிக்க கொடுத்தால் இருமலின் வேகம் குறையும்.

கொதிக்க வைத்த குடிநீர் தண்ணீரில் எந்த மருந்தை கலந்தாலும் வைரஸ் கிருமிகள் தாண்டி வந்து விடுகிறது அதனால் வியாதியும் வந்து விடுகின்றது இந்த நச்சுத் தண்ணீரைக் கொதிக்க வைப்பதன்  மூலமே வைரஸ் கிருமிகள் சாகின்றன். எனவே தண்ணீரை கொதிக்க வைத்து தான் சாப்பிட வேண்டும்.


குழந்தைகளுக்கு வயிற்றுப் பூச்சிகள் ஒழிய:−


வசம்பை நெருப்பில் சுட்டு பொடி செய்து அதனுடன் தேன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க வயிற்றுப் பூச்சிகள் ஒழியும்.


தொண்டை கரகரப்பு நீங்க:−


வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொண்டும் பனங்கற்கண்டை சிறிது எடுத்துக் கொண்டும் இந்த இரண்டையும் ஒரே சட்டியில் போட்டு சிவக்க வறுத்து சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கும்.


முகப்பருவை போக்க:−


வீட்டில் உள்ள சீரகத்தை எருமைப் பால் விட்டு மைய அரைத்து முகப்பருவின் மீது

தடவ முகப்பரு மறையும்.


சளித்தொல்லை நீங்க:−


யூக்கலிப்டஸ் மரம் கொழுந்து இலைகளை கொழுந்து இலைகளை கொண்டு வந்து ஒரு டம்ளர் நீர்விட்டு காய்ச்சி அரை டம்ளராக சுண்டிய ஏதும் சாப்பிட சளித்தொல்லை குணமாகும்.


காலரா நோய்க்கு பாதுகாப்பு:−


காலரா நோய் பரவி வந்தால் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கைக்காக வீட்டின் ஓரங்களிலும் வெளியிலும் டெட்டால் தெளித்து வைக்க வேண்டும். குடிநீரை கொதிக்க வைத்து அதனுடன் எலுமிச்சம்பழத்தை அறுத்து போட்டு வைக்க வேண்டும் கிராமங்களில் மாட்டின் சாணத்தில் சூடான தண்ணீரை ஊற்றி கரைத்து வீட்டின் சுற்றுப்புறத்தில் தெளித்து வைத்து பாதுகாத்துக் கொள்வார்கள்.


வயிற்றுப் பூச்சி ஒழிய:−


அன்னாசி பழத்தை தினசரி சாப்பிட்டு வர வயிற்றில் பூச்சிகள் ஒழியும்.


படுக்கை புண் ஆற:−


படுக்கைப் புண் வந்தவர்களுக்கு மஞ்சளுடன் குப்பைமேனி இலையை சேர்த்து மையாக அரைத்து பொருள் மீது போட குணமாகும்.


மயக்கம் தெளிய:−


கடுகை அரைத்து உள்ளங்கையில் தேய்க்க மயக்கம் தெளியும்.அல்லது காய்ந்த மிளகாயைச் சுட்டு அந்த நெடி மூக்கில் ஏறும்படி செய்தாலும் மயக்கம்

தெளியும்.


தும்மல் நிற்க:−


தொடர்ந்து தும்மல் போடுவார்கள் தூதுவளை இலையுடன ஐந்து மிளகையும் சேர்த்து தண்ணீர் விட்டு மைய அரைத்து அரை முக்கால் லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து பின் பால் சர்க்கரை சேர்த்து சாப்பிட தும்மல் நிற்கும்.


முகம் அழகு பெற:−


துளசி இலையை கசக்கி முகத்தில் தேய்த்துக்கொண்டு இரவில் படுத்து காலையில் எழுந்து கழுவினாலும் முகம் அழகு பெறும்.


நகம் பளபளப்பு பெற:−


தேங்காய் எண்ணெயுடன் கீழாநெல்லி வேரை பறித்துப் போட்டு கொதிக்க வைத்து அந்த எண்ணெயை நகத்தின் மீது தடவ முகம் பளபளப்புடன் காணப்படும்.


🌏நன்றி ஷர்மிளா ரவிக்குமார்


🌍" பகிர்தல் " ஒரு மிகச்சிறந்த பண்பாடு மட்டுமல்ல.

வாழ்க்கையில் உயர்வான இடத்தை அடைய 

முக்கியமானதொரு ஆயுதமும் அதுதான்...🌏

Comments

Popular posts from this blog