🌍 நித்திரா தேவி
அருள் வேண்டும் 🌏
🍂படுக்கையை விட்டு எழும்போது மந்திரம் சொல்லி எழுவது எதற்கு?🌿
🌎அன்பு முகநூல் நண்பர்களே "ஓம்"என்னும் வலைப்பூ தளம் ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன .அதை நீங்கள் கிளிக் செய்தால் "ஓம் "வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்🌏
https://www.facebook.com/om14422019/
🌍🌎🌏உண்டு தன் உடலை வளர்த்து கொள்ள எவ்வளவோ பொருள்கள் இருந்தும் உயிரை துடிக்கத் துடிக்க கொன்று அதன் உடலை உண்பவன் அருள் உணர்வுடன் வாழ முடியாது 🌍🌎🌏
நித்திரை தேவியின் அருளை விரும்பாத உயிரினம் உள்ளதாக நாம் கேள்வி பட்டது இல்லை. அன்றாட உலக வாழ்கையின் இன்னல்களில் இருந்து விடுபட்டு ஒரு நபர் ஆத்மாவுக்குள் ஒதுங்குவதே நித்திரை என்று ஆசாரியர்கள் விளக்கம் கோருவர்.
தூக்கத்தை இழந்தவர்கள் பொதுவாக துர்பாக்யசாலிகள் என்று அழைப்பது உண்டு. அதிர்ஷ்டசாலிகள் நித்திரையின் ஆழத்தில் எல்லாம் மறந்து தூங்குகின்றனர், உணவும் தூக்கமும் ஒன்றோடொன்று இணைந்ததென்பது நமது உறுதியான நம்பிக்கை.
தூக்கத்தை மட்டும்மல்ல, தூங்கி எழுவதட்க்கும் சில விதி முறைகள் உண்டு என்பதை உணரலாம். தூக்கத்தின் பிடியை விட்டு உதயத்திற்கு முன் ஒன்றரை நாழிகை விடியலில் பிரம்ம முகூர்த்ததில் எழுந்து தினசரி அலுவல்களில் ஈடுபடவேண்டும் என்று ஆசாரியர் கூறியுள்ளனர். இந்த வேளையில் தூங்கினால் உடல் நிலை குன்றும் என்றும், சோர்வும் தரித்திரமும் உருவாகும் என்றும் நம்பிக்கை நிலவுகின்றது.
"அதனால் பிரம்ம முகூர்த்ததில் வலது பக்கம் திரும்பி எழ வேண்டும்."
விழித்தவுடன் படுக்கையில் இருந்து எழுந்து ஓடுவது தவறு. விழித்த உடன் இருகைகளையும் மலர விரித்து அதைப்பார்த்து லட்சுமி, சரஸ்வதி, கெளரி, என்ற தேவிமாரி தரிசித்து மந்திரம் சொல்ல வேண்டும்.
கராக்ரேவாசதே லட்சுமி,
கரமத்யே சரஸ்வதி,
கரமூலே ஸ்திதா கெளரி,
பிரபாதே கரதர்சனம்
தூக்கம் நீடித்து இருக்கும் போது மனிதனின் இரத்த ஓட்டத்துக்காக இருதயம் மிகக்குறைவான சக்தியையே பயன்படுத்துகின்றது. திடீரென குதித்து எழுந்து செல்லும் போது இருதயம் மிகக்கடினமாக செயல் பட வேண்டிய நிலை உருவாகின்றது. இது இதய துடிப்பை அதிகரித்து நிலை தடுமாற செய்கின்றது. அதனால் படுக்கையை விட்டு எழும்பி இருந்து சிறிது நேரம் பதிந்த குரலில் மந்திரங்கள் சொல்லி கொண்டிருக்க வேண்டும். இது நம் இரத்த ஓட்டத்தை நிலை நிறுத்துவதற்காகவே என்று விஞ்ஞானம் கூறுகின்றது.
(அது மட்டும் அல்ல இருதய நோயாளிகளில் 23% படுக்கையில் இருந்து எழும்பும் போது நிகழ்ந்த விபத்தால் நோயுற்றனர் என்பது புள்ளி விபரம்.)
🌍 அன்பு முகநூல் நண்பர்களே அன்பு முகநூல் நண்பர்களே நீங்கள் பார்த்த படுக்கையை விட்டு எழும்போது மந்திரம் சொல்லி எழுவது எதற்கு என்ற விவரங்கள் பார்த்தவர்கள் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்கள்
சர்வம் சிவார்ப்பணம் எதுவும் எனக்கில்லை எல்லாம் உனக்கே என்பது அர்த்தம் 🌎🌏🌍
🌺நன்றி சங்கரநாராயணன்
Comments
Post a Comment