🌿துளசி இலையை காதுக்குப்பின் வைப்பது ஏன்? 🌿





🌎அன்பு முகநூல் நண்பர்களே  "ஓம்"என்னும் வலைப்பூ தளம் ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன .அதை நீங்கள் கிளிக் செய்தால் "ஓம் "வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்🌏


https://www.facebook.com/om14422019/


காதுக்கு பின் துளசிக்கதிர் அல்லது இலை சூடுவதற்க்கு இக்காலத்தில் யாரும் தயாராக மாட்டார்கள். அப்படி சூடுபவர்களை காதில் பூ வைத்தவன் என்று ஏளனமாக கூறுவதுண்டு.. ஆனால் காதுக்கு பின் துளசி வைப்பதனால் பெரும் பயனடைந்தனர் பண்டைய மக்கள். மனித உடலில் மிக கூடுதல் உறிஞ்சும் சக்தி யுடையது காதுக்கு பின்புறம் ஆகும் என்பது விஞ்ஜானம் நிரூபித்திருக்கிறது . 


துளசியின் மருத்துவ குணங்களை நாம் நன்கறிவோம். இந்த மருத்துவ குணங்கள் காதுக்கு பின்னுள்ள சரும வழியாக ஊடுருவி செல்லும்.. இதுவே பழங்காலத்து மக்கள் காதுக்கு பின் துளசி இலையை சூடி வந்ததும் பின் சந்ததிக்கு அதை கற்பித்ததும்... பழங்காலத்திலுள்ள வீடுகளில் துளசி மாடம் கட்டி துளசியை ஓர் புனித செடியாக பராமரித்து வந்தனர்…


சூரியஒளி கிடைக்கும் இடத்தில் கிழக்கு பக்கத்து வாசலுக்கு நேராக துளசி மாடம் கட்ட வேண்டும் என்று ஆசாரியர் போதித்துள்ளனர்... வீட்டில் தரையை விட தாழ்ந்த மட்டத்திலாகாமல் குறிப்பிட்ட அளவில் துளசி தரை அமைக்க வேண்டும். துளசி தரையில் நடுவதர்க்காக கிருஷ்ண துளசி தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விதிக்கபட்டுள்ளது. 

துளசி செடிக்கு பக்கம் அசுத்தமாக செல்வதாகாது. ஜெபம் செய்து கொண்டே அதன் பக்கம் செல்ல வேண்டும்.. துளசியை தினமும் மூன்று வேளை வலம் வர வேண்டும்..


வலம் வரும் போது


'பிரசீத துளசி தேவி 

பிரசீத ஹரி வல்லபே 

க்ஷீ ரோதமத நோத்புதே

துளசி த்வாம் நமாம்யகம்'


என்று மந்திரம் சொல்ல வேண்டும்...


துளசிப்பூ பறிக்கும் போது 


'துளஸ்வமுத சம்பூதா

சதா த்வம் கேசவப்ரியே 

கேச வார்த்தம் லுணமி த்வாம் 

வரதா பவ சோபனே'


மாலை நேரமும், ஏகாதசிக்க்கும், செவ்வாய் வெள்ளி நாட்களிலும் துளசிபூ பறிக்கலாகாது. என்றும் விதியுண்டு. பூஜைக்கல்லாமல் துளசி பூ பறிக்கவும் கூடாது..


🌿 நன்றி சங்கரநாராயணன்


🌍" பகிர்தல் " ஒரு மிகச்சிறந்த பண்பாடு மட்டுமல்ல.

வாழ்க்கையில் உயர்வான இடத்தை அடைய 

முக்கியமானதொரு ஆயுதமும் அதுதான்...🌏


Comments

Popular posts from this blog